தமிழ்நாடு

'விரைவில் போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் சட்டம்'.. அமைச்சர் மூர்த்தி கூறிய முக்கிய தகவல் இங்கே!

போலிப்பத்திரவு பதிவுகளை ரத்து செய்யும் சட்டம் ஒரு வாரத்திற்குள் கொண்டு வந்து நடைமுறைக்கு வரும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

'விரைவில் போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் சட்டம்'.. அமைச்சர் மூர்த்தி கூறிய முக்கிய தகவல் இங்கே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவுகளுக்கான நேரம் தாமதமாவதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இந்நிலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள சொக்கிகுளம் மற்றும் தல்லாகுளம் சார்பு அலுவலகங்களில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பத்திரப்பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து பின்னர் நேரடியாகப் பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பத்திரப்பதிவுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

'விரைவில் போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் சட்டம்'.. அமைச்சர் மூர்த்தி கூறிய முக்கிய தகவல் இங்கே!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, " சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களில் வங்கிக்கடனுக்கான சொத்துப்பிணைய உரிமைப்பத்திரம் பதிவு செய்திட ஆன்லைன் வசதி திட்டம் நாளை முதல் அமலாகிறது.

பத்திரபதிவில் தாமதம் ஏற்படுவது தொடர்பாக வந்த புகாரையடுத்து மதுரை தல்லாகுளம், சொக்கிகுளம் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டோம், ஒரு பத்திரப்பதிவு 10 முதல் 15 நிமிடங்களில் முடிவடைகிறது. நேரடி ஆய்வில் தாமதத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுச் சரிசெய்யப்பட்டுள்ளது. இனி பத்திரப்பதிவில் தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை.

போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் சட்டம் இன்னும் ஒரு வாரத்தில் அமலாகவுள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் உள்ள குறைகள் சரிசெய்யப்படும். போலிப்பத்திரப்பதிவு தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்தி ஆய்வு செய்யப்பட்டு சொத்தின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.

'விரைவில் போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் சட்டம்'.. அமைச்சர் மூர்த்தி கூறிய முக்கிய தகவல் இங்கே!

பத்திரப்பதிவுத்துறையில் நடைபெறும் முறைகேடு தொடர்பாக ஆதாரத்துடன் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் போலிப்பத்திரவு செய்பவர்கள் சிறைத் தண்டனைக்கு ஆளாவார்கள். பத்திரப்பதிவுத்துறை வெளிப்படத்தன்மையுடன் உள்ளோம், மக்கள் ஏமாறுகின்றனர், புதிய பத்திரப்பதிவு அலுவலகங்கள் அனைத்து வசதிகளுடன் துவங்கப்படும்.

பதிவுத்துறையில் கடந்த ஆண்டு 5440கோடி வருவாய் 10லட்சத்து 92ஆயிரம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 7865 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது, 16லட்சம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories