தமிழ்நாடு

"நீங்கள் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்" -விருது பெற்ற கழக முன்னோடிகளிடம் முதலமைச்சர் வேண்டுகோள் !

ரத்தம், வியர்வை, உழைப்பை கொடுத்து இந்த இயக்கத்தை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். உங்கள் தொண்டுக்கான பாராட்டு அல்ல இது. எங்களின் நன்றியை காட்டுவதற்கான விழா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 "நீங்கள் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்" -விருது பெற்ற கழக முன்னோடிகளிடம் முதலமைச்சர் வேண்டுகோள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திமுக முப்பெரும் விழாவில் சம்பூர்ணம் சாமிநாதன் அவர்களுக்கு பெரியார் விருதும் , கோவை திரு. இரா.மோகன் அவர்களுக்கு ‘அண்ணா விருதும்புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு அவர்களுக்கு, ‘பாவேந்தர் விருதும், குன்னூர் சீனிவாசன் அவர்களுக்கு, ‘பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டது.

பின்னர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் "கழக அடையாளமாய் கறுப்பு-சிவப்பு பார்டர் வைத்து வேஷ்டி தயாரித்தவர் அம்மையார் சம்பூர்ணம் சாமிநாதன். இவரைப் போல 10 சம்பூர்ணம் இருந்தால் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது என்று கலைஞரே பாராட்டி இருக்கிறார். அவருக்கு பெரியார் விருது அளிப்பது மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.

 "நீங்கள் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்" -விருது பெற்ற கழக முன்னோடிகளிடம் முதலமைச்சர் வேண்டுகோள் !

சென்னை மாவட்டத்தில் தி.மு.கவை சிங்கம் போல வழிநடத்தியவர் டி.ஆர் பாலு. தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்ல, இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் தி.மு.க குரலை ஓங்கி ஒலிப்பவர். அவருக்கு கலைஞர் விருது அளிப்பது சரியான தேர்வு.நான் இளைஞரணி செயலாளராக இருந்தபோது, என்னை அழைத்துவந்து விருதுநகர் மாவட்டத்தில் கிராமம் கிராமமாக அழைத்துச்சென்று கழகக்கொடி ஏற்ற வைத்த பெருமை குன்னூர் சீனிவாசனுக்கு உண்டு. ரத்தம், வியர்வை, உழைப்பை கொடுத்து இந்த இயக்கத்தை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். உங்கள் தொண்டுக்கான பாராட்டு அல்ல இது. எங்களின் நன்றியை காட்டுவதற்கான விழா. நீங்கள் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்" என முதலமைச்சர் பேசினார்.

banner

Related Stories

Related Stories