தமிழ்நாடு

"இந்த அரசு மக்களுக்கானது என்பதை உணர அரசு மருத்துவமனைக்கு போய் பாருங்கள்.." - இணையத்தில் வைரலாகும் பதிவு !

"ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி நாட்டின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் பகலில் சென்றாலும் இரவில் சென்றாலும் தூங்காநகரம் போல அத்தனை ஜேஜே என உள்ளது."

"இந்த அரசு மக்களுக்கானது என்பதை உணர அரசு மருத்துவமனைக்கு போய் பாருங்கள்.." - இணையத்தில் வைரலாகும் பதிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் மருத்துவ அம்சங்களில் சிறப்பாக விளங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதன்மையாக திகழ்கிறது. இங்கு தான் மருத்துவக்கல்லூரிகள் அரசு மருத்துவமனைகள் என அதிகமாக காணப்படுகிறது. அதில் ஒன்று தான் சென்னை இராயபுரத்தில் அமைந்துள்ள 'ஸ்டான்லி அரசு மருத்துவமனை'.

பல்வேறு வசதிகளை கொண்டுள்ள இந்த மருத்துவமனை கடந்த அதிமுக ஆட்சியில் சரிவர பராமரிக்காமல் இருந்தது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கூட இல்லாமல் காணப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வனத்தில் ஸ்டான்லி மருத்துவமனைக்கும் கொண்டுவந்தது.

"இந்த அரசு மக்களுக்கானது என்பதை உணர அரசு மருத்துவமனைக்கு போய் பாருங்கள்.." - இணையத்தில் வைரலாகும் பதிவு !

சென்னையில் இருக்கும் மருத்துவமனையின் மருத்துவ சேவையை பலரும் பாராட்டி வரும் நிலையில், ஏழை, எளிய மக்களின் நலனுக்காக ரூ.1000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை மையம் கடந்த மே மாதம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த முழு உடல் பரிசோதனை மையத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டுமே சுமார் 1000 பேர் பயனடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஏழை எளிய மக்களுக்கு பயனுறும் வகையில் இம்மருத்துவமனையில் சிகிச்சை கவனிப்பு இருக்கிறது. இதனை பலரும் புகழ்ந்து வரும் நிலையில், இது குறித்து வாசகர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"இந்த அரசு மக்களுக்கானது என்பதை உணர அரசு மருத்துவமனைக்கு போய் பாருங்கள்.." - இணையத்தில் வைரலாகும் பதிவு !
"இந்த அரசு மக்களுக்கானது என்பதை உணர அரசு மருத்துவமனைக்கு போய் பாருங்கள்.." - இணையத்தில் வைரலாகும் பதிவு !

அதில், "நேற்று இரவு என் நண்பர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவரை பார்க்கச் சென்றிருந்தேன். அரசு எந்திரம் என்பது எத்தனை பிரம்மாண்டமானது என்பதை அந்த மருத்துவமனையின் சூழல் உணர்த்தியது. அத்தனை அகண்ட காரிடார்களிலும் cane movement-ற்கு தரமான tactile warning strips பதித்துள்ளதைப் பார்த்தேன். மாற்று திறனாளிகளை மதித்து ஒவ்வொரு அறை கதவின் வாயில் வரை இந்த strips எல்லா தளங்களிலும் பதித்துள்ளனர்.

இத்தனை barrier free மருத்துவமனை வடிவமைப்பை தனியாரில் கூட நான் பார்த்ததில்லை. தனியார் மருத்துவமனையை விட lifts நன்றாக இத்தனை மக்களுக்கு இடைவிடாமல் இயங்குகிறது.

மருத்துவர்கள் சேவை எத்தகைய சேவை என்பதை அங்கே பார்த்தேன்; 8 மணி நேர வேலைக்கே சுணங்குபவர் மத்தியில் 12 மணிநேரம் உழைக்கின்றனர்.

"இந்த அரசு மக்களுக்கானது என்பதை உணர அரசு மருத்துவமனைக்கு போய் பாருங்கள்.." - இணையத்தில் வைரலாகும் பதிவு !

நேற்று நான் சென்ற சமயத்தில் rounds வந்த ஒரு இளம்பெண் மருத்துவர் அத்தனை கனிவாக தீர்க்கமாக ஒவ்வொரு படுக்கைக்கும் சென்று reports பார்த்து குறைகள் கேட்டு prescription எழுதித்தருகிறார். இரண்டு கோட் பாக்கெட்டில் இருந்தும் memo காகிதங்களை உருவி சரசரவென அடுத்த வேளைக்குள் செய்ய வேண்டிய சோதனைகள் வாங்க வேண்டிய மருந்துகளை, நாளை தேவைப்படும் ரத்த வகை என எழுதித் தந்தபடியே இருந்தார்,இடையிடையே பத்து குறுக்கீடுகல் வருகிறது; அவசர குறுக்கீடுகள், நர்ஸ் மற்றும் டெக்னீஷியனின் கேள்விகள், எதற்கும் கடுகடு இல்லை.

அனைத்தையும் சரிசெய்து மீண்டும் ரவுண்ட்ஸ் விசாரணைகளுக்கு அதே பேஷண்டிடம் வந்து சோதனைகளை தொடர்கிறார். நேற்று நான் சென்ற wing-ன் சுவற்றில் எண்கள் 20 வரை தான் எழுதியிருந்தது ஆனால் அங்கே 35 படுக்கைகள் நிரம்பி இருந்தது, அப்படி என்றால் அரசு மருத்துவர்கள் எத்தனை கூடுதலாக உழைக்கின்றனர் எனப் பாருங்கள்.

வெளியே மருத்துவமனை கேண்டீனில் தரமான உணவுகள் வாங்கக்கூடிய விலையில் இருக்கிறது.

"இந்த அரசு மக்களுக்கானது என்பதை உணர அரசு மருத்துவமனைக்கு போய் பாருங்கள்.." - இணையத்தில் வைரலாகும் பதிவு !

ஸ்டான்லி மருத்துவமனை மக்கள் மனதில் மிகவும் பதிந்த பெயர், ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவ சிகிச்சை, மருத்துவ கல்விக்கான இந்தியாவின் பெருமைமிகு பழமையான மருத்துவ மையங்களில் முதன்மையானது. இம்மருத்துவமனைக்கு 1797 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியார் வித்திட்டுள்ளனர்.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி நாட்டின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் பகலில் சென்றாலும் இரவில் சென்றாலும் தூங்காநகரம் போல அத்தனை ஜேஜே என உள்ளது.

நேற்று இரு போலீஸார் ஒரு கைதியை முன் விலங்கிட்டு தோளில் கையிட்டு அணைத்து மருத்துவ உதவிக்கு அழைத்து வந்த காட்சியை காணமுடிந்தது; எலும்பு முறிவு பிரிவு வாசல் நாற்காலிகளில் கட்டு போட்டிருந்த நான்கு இளைஞர்களின் எக்ஸ்ரே ஃபிலிமை போலீசாருக்கு விளக்கியபடியே இருந்தார் ஒரு இளம் மருத்துவர், இப்படி அத்தனை surreal சூழல்.

"இந்த அரசு மக்களுக்கானது என்பதை உணர அரசு மருத்துவமனைக்கு போய் பாருங்கள்.." - இணையத்தில் வைரலாகும் பதிவு !

மருத்துவமனையில் யாரும் எதுவும் கையூட்டு கேட்பதில்லை. நோயாளிகள் தந்தாலும் வச்சிக்க, நீ எடுத்துட்டு போ என்றார் ஊழியர். உண்மையிலேயே இத்தனை தரமிகு மேல் சிகிச்சை தரமிகு அறுவை சிகிச்சை எந்த தனியார் மருத்துவனை சென்றாலும் கிடைக்காது. ஒரு மணிநேர உள் இருத்தலுக்கு - 1000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் விதித்து GST தீட்டி லட்சங்களில் வாங்கிய பின் தான் நோயாளியை வீட்டுக்கு அனுப்புவார்கள்.

நோயாளிகள் அவர்களுடன் வருபவர்கள் நோயாளி புழங்கிய படுக்கையை சுத்தமாக வைத்து விட்டுச்சென்றால் பின் வருபவருக்கும் சுத்தமான படுக்கை கிடைக்கும். இதே போல தான் கழிவறையும் அவன் flush செய்தானா? அதனால் நான் flush செய்ய மாட்டேன் என ஒவ்வொருவரும் flush செய்யாமல் தன் கழிவை சுத்தம் செய்யாமல் சென்றால் தரமான கழிவறைகளாக அவை இருக்காது.

"இந்த அரசு மக்களுக்கானது என்பதை உணர அரசு மருத்துவமனைக்கு போய் பாருங்கள்.." - இணையத்தில் வைரலாகும் பதிவு !

உண்மையில் அரசு மக்களுக்கானது, அதன் மக்களுக்காக உழைக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள அரசு மருத்துவமனையில் சென்று பாருங்கள்.

நேற்று எனக்கு இங்கே தலைமை மருத்துவர் பெரிய உதவியைச் செய்தார், அவர் பெயரை அனுமதி வாங்காமல் குறிப்பிட முடியாது" என்று பாராட்டி குறிப்பிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories