தமிழ்நாடு

கிருஷ்ணகிரி : மணப்பெண் கண்முன்னே உயிரிழந்த சகோதரி.. திருமண நிகழ்வுக்காக வேனில் சென்றபோது நேர்ந்த சோகம்..

திருமண நிகழ்வுக்காக 20-க்கும் மேற்பட்டோர் வேனில் சென்றபோது எதிர்பாராத விதமாக வேன் விபத்துக்குள்ளானதால் பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி : மணப்பெண் கண்முன்னே உயிரிழந்த சகோதரி.. திருமண நிகழ்வுக்காக வேனில் சென்றபோது நேர்ந்த சோகம்..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை அடுத்துள்ள திட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சிக்காக ஒரு வேனில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, அந்த வேனை முந்தி செல்ல முயன்றுள்ளது. இதனால் அந்த வேன் டிரைவரரும் முந்தி செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் பயணித்தவர்களில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மணப்பெண்ணின் தங்கை சாந்தி என்ற பெண் வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி : மணப்பெண் கண்முன்னே உயிரிழந்த சகோதரி.. திருமண நிகழ்வுக்காக வேனில் சென்றபோது நேர்ந்த சோகம்..

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த பெண்ணின் சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி : மணப்பெண் கண்முன்னே உயிரிழந்த சகோதரி.. திருமண நிகழ்வுக்காக வேனில் சென்றபோது நேர்ந்த சோகம்..

இந்த சூழலில் நடக்கவிருந்த திருமணமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமண நிகழ்வுக்காக உறவினர்கள் வேனில் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதால் பெண் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories