தமிழ்நாடு

சிகிச்சைக்குப் பிறகு எப்படி இருக்கிறார் சிறுமி தான்யா? : அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு !

சிறுமி தான்யாவின் அறுவைசிகிச்சைக்கு பிந்தைய புகைப்படத்தை சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

சிகிச்சைக்குப் பிறகு எப்படி இருக்கிறார் சிறுமி தான்யா? : அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினர். இவர்களுக்குக் கடந்த 2012ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள்,மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர்களின் மூத்த மகள் டானியா (9). இவர் டானியா வீராபுரம் அரசினர் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். எல்லா குழந்தைகள் போல் டானியாவும் மூன்று வயது வரை இயல்பாக வளர்ந்துள்ளார். பின்னர் அவருக்கு முகத்தில் கரும்புள்ளி போன்று தோன்றியுள்ளது. இதனை முதலில் சாதாரண ரத்தக்கட்டு என பெற்றோர்கள் நினைத்துள்ளனர்.

சிகிச்சைக்குப் பிறகு எப்படி இருக்கிறார் சிறுமி தான்யா? : அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு !

ஆனால் இது சரியாகவில்லை. பின்னர்தான் இது முக சிதைவு நோய் என்று பெற்றோர்களுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த ஆறு ஆண்டுகளாகப் பல மருத்துவர்களைப் பார்த்து வந்துள்ளனர். இருப்பினும் சிறுமிக்கு சரியாகவில்லை. மேலும் பல லட்சங்களை சிகிச்சைக்காக பெற்றோர்கள் செலவழித்துள்ளனர். இதையடுத்து தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இது பற்றி அறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கிஸும் சிறுமியை நேரில் சந்தித்து 'உனக்கு அரசு உதவியாக இருக்கும்' என உறுதியளித்தார். அதன்பின்னர் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறுமியின் சிகிச்சையை மேற்கொள்ளவதாக அறிவித்தது.

சிகிச்சைக்குப் பிறகு எப்படி இருக்கிறார் சிறுமி தான்யா? : அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு !

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுமிக்கு அறுவை சிகிச்சை சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதன்பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று, குழந்தையுடன் உரையாடினார்.

இந்த நிலையில், சிறுமியின் அறுவைசிகிச்சைக்கு பிந்தைய புகைப்படத்தை சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், சிறுமியின் முகம் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளது தெரியவந்துள்ளது. இனி சிறுமியின் விருப்பப்படி அவள் மகிழ்ச்சியோடு நண்பர்களோடு விளையாடுவாள் என எதிர்பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories