
திண்டுக்கல்லைச் சேர்ந்த சுரேஷ் , சுப்பிரமணி ஆகிய இருவரும் வேலூரிலிருந்து திருச்செங்கோடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். புளியம்பட்டி சுரக்காய் தோட்டம் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த கார் மீது இரு சக்கர வாகனம் மோதியுள்ளது.
இதில் சுரேஷ் , சுப்பிரமணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதேபோல் காரில் வந்த ராமகிருஷ்ணன் அரவது மனைவி ஜீவிதா ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து பற்றி அறிந்து அங்க வந்த போலிஸார் படுகாயம் அடைந்தவர்கள் உடலை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஜீவிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் ராமகிருஷ்ணன், ஜீவிதா ஆகிய இருவருக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








