தமிழ்நாடு

குழந்தைகளுக்காக ஆன்லைனில் ORDER செய்த ஐஸ்க்ரீம்.. ஆனால் வந்ததோ..! - அதிர்ந்த போன புகைப்பட பத்திரிகையாளர்!

குழந்தைகளுக்காக ஆன்லைனில் ஐஸ்க்ரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்த நபருக்கு 2 ஆணுறைகள் டெலிவரியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்காக ஆன்லைனில் ORDER செய்த ஐஸ்க்ரீம்.. ஆனால் வந்ததோ..! - அதிர்ந்த போன புகைப்பட பத்திரிகையாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நேற்று இரவு தனது குழந்தைகளுக்காக ஸ்விக்கியில் ஐஸ்க்ரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் இவர் ஆர்டர் செய்திருந்த பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டது.

அப்போது டெலிவரி பாயிடம் இருந்து தான் ஆர்டர் செய்த பொருள் அடங்கிய பாக்கெட்டை திறந்து பார்த்தபோது அதில் ஆணுறை (Condom) இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் இது குறித்து டெலிவரி பாயிடம் கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

குழந்தைகளுக்காக ஆன்லைனில் ORDER செய்த ஐஸ்க்ரீம்.. ஆனால் வந்ததோ..! - அதிர்ந்த போன புகைப்பட பத்திரிகையாளர்!

பின்னர் இதனை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கூறியபோது, 'இதை ரிட்டர்ன் எடுக்கும் அதிகாரம் எனக்கில்லை, வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளியுங்கள்' என்று டெலிவரி பாய் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புக்கொண்ட பெரியசாமி, இது குறித்து புகார் அளித்தார். அப்போது அவர்கள் "மன்னித்து விடுங்கள்.. தவறாக டெலிவரி ஆகியிருக்கும்.. தங்களுக்கு தங்கள் பணத்தை உடனே திரும்ப அனுப்புகிறோம்" என்று கூறியுள்ளனர்.

குழந்தைகளுக்காக ஆன்லைனில் ORDER செய்த ஐஸ்க்ரீம்.. ஆனால் வந்ததோ..! - அதிர்ந்த போன புகைப்பட பத்திரிகையாளர்!

இருப்பினும் பெரியசாமி, தனக்கு தான் ஆர்டர் செய்த பொருட்கள் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் அப்படி செய்ய முடியாது என்று கூறி பணத்தை திரும்ப அனுப்பியுள்ளனர். இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த பெரியசாமி இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இவர் தனியார் செய்தி நிறுவனத்தின் மூத்த புகைப்பட ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories