தமிழ்நாடு

சாரணர் தேர்தல்.. போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அன்பில் மகேஸ்: கடந்த முறை படுதோல்வியடைந்த எச்.ராஜா!

தமிழ்நாடு சாரண, சாரணியர் அமைப்பின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சாரணர் தேர்தல்.. போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அன்பில் மகேஸ்: கடந்த முறை படுதோல்வியடைந்த எச்.ராஜா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை காமராஜர் சாலையில் தேசிய சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் சாரண, சாரணியர் அமைப்பில் சேரும் மாணவர்களுக்கு நற்பண்புகள் மற்றும் திறன்களை வளர்க்கும் பயிற்சிகள் அளிக்கப்படும்.

இந்த சாரணர், சாரணியர் இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், பயிற்சியாளர் போன்ற முக்கிய பொறுப்புகளுக்குத் தேர்தல் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கு நடைபெற்ற தேர்தலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அமைச்சர் அன்பில் மகேஸ் ஏற்கனவே சாரண, சாரணியர் இயக்கத்தின் புரவலராகவும் இருந்துள்ளார்.

சாரணர் தேர்தல்.. போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அன்பில் மகேஸ்: கடந்த முறை படுதோல்வியடைந்த எச்.ராஜா!

இந்நிலையில்தான் அவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.கவின் மூத்த நிர்வாகியான எச்.ராஜா கடந்த ஆண்டு நடைபெற்ற சாரணர் தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வியடைந்ததை நினைவுபடுத்தி பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

2017ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்காக பா.ஜ.கவின் எச்.ராஜாவும், முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குநர் மணி ஆகியோரும் போட்டியிட்டனர். அதில், எச்.ராஜாவை 180 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மணி வீழ்த்தி தலைவர் பதவியை வென்றார். அவர் பெற்றிருந்த வாக்குகள் 232.

சாரணர் தேர்தல்.. போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அன்பில் மகேஸ்: கடந்த முறை படுதோல்வியடைந்த எச்.ராஜா!

ஒன்றிய, அ.திமு.க செல்வாக்கு என பல்வேறு அந்தஸ்துகள் இருந்தும் எச்.ராஜா பெற்றதோ வெறும் 52 வாக்குகளே. இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், இது முறைகேடாக நடந்த வாக்குப்பதிவு, ஆகவே மறுதேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறி சர்ச்சையைக் கிளப்பினார் எச்.ராஜா.

இப்படித் தேர்தலில் படுதோல்விய அடைந்த எச்.ராஜாவையும், போட்டியின்றி வெற்றி பெற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியையும் இணைத்து பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories