தமிழ்நாடு

’தெரிந்ததை மட்டும் பேசுங்கள்...’: ஆளுநர் ரவி திருக்குறள் சர்ச்சை- காட்டமான பதிலடி கொடுத்த பழ.நெடுமாறன்

திருக்குறளில் உள்ள ஆன்மிக சிந்தனைகள் ஜி.யூ.போப் நீக்கயதாக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

’தெரிந்ததை மட்டும் பேசுங்கள்...’: ஆளுநர் ரவி திருக்குறள் சர்ச்சை- காட்டமான பதிலடி கொடுத்த பழ.நெடுமாறன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

டெல்லியில் லோதி எஸ்டேட் பகுதியில் டெல்லி தமிழ் கல்வி கூட்டமைப்பின் (Delhi Tamil Education Association - DTEA) சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், பிரிட்டிஷாரின் கிழக்கு இந்திய கம்பெனியும், ஜி.யு.போப் போன்ற மிஷனரிக்களும் திருக்குறளின் பக்தி என்ற ஆன்மாவை வேண்டுமென்றே மறைத்துள்ளதாக தெரிவித்தார்.

’தெரிந்ததை மட்டும் பேசுங்கள்...’: ஆளுநர் ரவி திருக்குறள் சர்ச்சை- காட்டமான பதிலடி கொடுத்த பழ.நெடுமாறன்

மேலும் பேசிய அவர், "திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப். அவருடைய மொழிபெயர்ப்பே இன்றளவிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்த மொழிபெயர்ப்பு காலனி ஆதிக்க மனோபாவத்துடன் இந்தியாவின் ஆன்மிக ஞானத்தை சிறுமைப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருக்குறளை இப்போது ஏதோ வாழ்வியல் நெறிகள் என்பது போல் மட்டும் குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கின்றனர். ஆனால் அது ஒரு இதிகாசம். அதில் நித்திய ஆன்மிகத்தின் ஆன்மா இருக்கிறது. முதல் திருக்குறளில் உள்ள ஆதி பகவன் என்ற வார்த்தை ரிக் வேதத்தில் இருந்து பெறப்பட்டது. அது இந்திய ஆன்மிகத்தின் மையப்புள்ளி. ஆனால் அதன் ஆன்மாவை ஜி.யு போப் வேண்டுமென்றே தனது மொழிபெயர்ப்பில் சிதைத்துள்ளார். ஆதிபகவன் என்பதை அவர் வெறும் முதன்மைக் கடவுள் (Primal Deity) என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்" என்றார்.

’தெரிந்ததை மட்டும் பேசுங்கள்...’: ஆளுநர் ரவி திருக்குறள் சர்ச்சை- காட்டமான பதிலடி கொடுத்த பழ.நெடுமாறன்

ஆளுநரின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான பழ நெடுமாறன் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "“திருக்குறளில் உள்ள ஆன்மிக ஞானத்தை சிதைக்கும் வகையில் ஜி.யு.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. ரிக் வேதத்தில் உள்ள ஆதிபகவன் என்பதையே திருக்குறளின் முதல் குறள் கூறுகிறது. ஆதிபகவன் என்பது பக்தியை குறிப்பிடுவதாகும். இதை சிதைக்கும் வகையில் ஆங்கில மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது” என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தில்லியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பேசியுள்ளார்.

’தெரிந்ததை மட்டும் பேசுங்கள்...’: ஆளுநர் ரவி திருக்குறள் சர்ச்சை- காட்டமான பதிலடி கொடுத்த பழ.நெடுமாறன்

சங்க நூல்களிலும், அதையொட்டி எழுந்த திருக்குறளிலும் சமயம் என்ற சொல்லாட்சியோ, மோட்சம் என்ற ஆன்மிகத் தத்துவத்தைக் குறிக்கும் எத்தகைய சொல்லோ அறவே இடம்பெறவில்லை. அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளைப் பற்றியே திருக்குறள் கூறுகிறது. மோட்சத்தைக் குறிக்கும் வீடு என்ற தத்துவம் திருக்குறள் எழுந்த காலத்தில் அறவே தோன்றப் பெறவில்லை.

சமயம் என்னும் சொல்லாட்சி கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை காப்பியத்தில்தான் முதன்முதல் இடம்பெறுகிறது. அதற்கு முன்னால் தோன்றிய பழந்தமிழ் நூல்கள் எதிலும் சமயம் என்ற சொல்லாட்சி இடம்பெறவே இல்லை.

GUPope
GUPope

ஜி.யு.போப் கிறித்துவ பாதிரியார் எனவே, அவர் திருக்குறளை தவறான கண்ணோட்டத்துடன் மொழிபெயர்த்துள்ளார் என்றும் ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அதே ஜி.யு. போப் அவர்கள் சைவத் திருமுறைகளில் ஒன்றான திருவாசகத்தைப் படித்து உள்ளம் உருகி அந்நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார் என்ற உண்மையையும் ஆளுநர் உணரவில்லை. திருக்குறளுக்கு வைதிக அடையாளத்தைச் சூட்டுவதற்கே அவர் முயற்சி செய்துள்ளார்.

ஜி.யு. போப் அவர்கள் முதன்முதலாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன் பெருமையை உலகமறியச் செய்தார். காந்தியடிகள் உள்பட பலரும் அம்மொழிபெயர்ப்பைப் படித்து திருக்குறளின் பெருமையை உணர்ந்து போற்றினர் என்பதையும் ஆளுநர் அறிந்திருக்கவில்லை.

தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு ஆகியவற்றைக் குறித்து தனது அறியாமையை வெளிப்படுத்துவதைவிட, பேசாமல் இருப்பது நல்லது என்பதை ஆளுநர் உணர வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

’தெரிந்ததை மட்டும் பேசுங்கள்...’: ஆளுநர் ரவி திருக்குறள் சர்ச்சை- காட்டமான பதிலடி கொடுத்த பழ.நெடுமாறன்

முன்னதாக கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., சு.வெங்கடேசனும், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய ஜீ யூ போப் பற்றியும் பாடம் எடுக்கும் ஆளுநரே, கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை படித்துப்பாருங்கள்.

ஆன்மீகத்தின் பெயரால் வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மனிதனாகவே மதிப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உளறல்களை நிறுத்துங்கள்!" என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார்.

banner

Related Stories

Related Stories