தமிழ்நாடு

இளைஞர்கள் கவனத்திற்கு.. உயர்நீதிமன்றம் முதல் இஸ்ரோ வரை: வேலை வாய்ப்பு குறித்து பல முக்கிய தகவல்கள்!

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி துறை தவிர மற்ற துறைகளில் காலியாக உள்ள அசிஸ்டண்ட் செக்‌ஷன் ஆஃபிசர் பணிக்கு மொத்தம் 74 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் கவனத்திற்கு.. உயர்நீதிமன்றம் முதல் இஸ்ரோ வரை: வேலை வாய்ப்பு குறித்து பல முக்கிய தகவல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. உயர்நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி துறை தவிர மற்ற துறைகளில் காலியாக உள்ள அசிஸ்டண்ட் செக்‌ஷன் ஆஃபிசர் பணிக்கு மொத்தம் 74 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் பொது பிரிவினருக்கு 22 இடங்களும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 இடங்களும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய பிரிவினருக்கு 2 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 15 இடங்களும், பட்டியலின அருந்ததியர் பிரிவினருக்கு 3 இடங்களும், பட்டியலின பிரினருக்கு 11 இடங்களும் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியில் 5 வருடங்கள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

தலைமை செயலகத்தில் காலிப்பணியிடங்கள்:

தலைமை செயலகத்தில் நிதி துறையில் Assistant Section Officer பணிக்கு 29 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் பொது பிரிவினருக்கு 9 இடங்களும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 7 இடங்களும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய பிரிவினருக்கு 1 இடமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 6 இடங்களும், பட்டியலின அருந்ததியர் பிரிவினருக்கு 1 இடமும், பட்டியலின பிரினருக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, வணிகவியல், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், இளநிலை உதவியாளர் பணியில் 5 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Assistant Section Officer பணிக்கு ரூ.36,400 முதல் ரூ.1,34,200 வரைக்கும் ஊதியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி துறை தவிர மற்ற துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கு மொத்தம் 49 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் பொது பிரிவினருக்கு 16 இடங்களும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 12 இடங்களும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய பிரிவினருக்கு 2 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 10 இடங்களும், பட்டியலின அருந்ததியர் பிரிவினருக்கு 1 இடமும், பட்டியலின பிரினருக்கு 8 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், இளநிலை உதவியாளர் பணியில் 3 வருடங்கள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு தலைமை செயலகத்தில் நிதி துறையில் உதவியாளர் பணிக்கு 9 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் பொது பிரிவினருக்கு 3 இடங்களும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2 இடங்களும், பட்டியலின அருந்ததியர் பிரிவினருக்கு 1 இடமும், பட்டியலின பிரினருக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, வணிகவியல், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், இளநிலை உதவியாளர் பணியில் 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

35 வயதுக்குள் இருக்கிற பட்டியலின அருந்ததியர் பிரிவினர், பட்டிலியன பிரிவினர் மற்றும் பழங்குடியின பிரிவினர் விண்ணப்பிக்கலாம். அதேபோல. 30 வயதுக்குள் இருக்கிற இதர பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.

உதவியாளர் பணிகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.73,700 வரைக்கும் ஊதியம் வழங்கப்படும்.

இந்த பணிக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 21.

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.trb.tn.nic.in%2F%3Ffbclid%3DIwAR3IBgEGiIA38QMSQ3tW1Ezo2G0rRQ0OGiB92H2iIWXenCyvz1aWMqLFTmo&h=AT2joKA6CLcmJc-8Laa6kEgFHRtLvNNG_Y8ah0Jv34W7TmnqmYNA7bziRa_MYkiBvzFBqJAcBNARBPxtlwdOVlw-ze3rfS07Qbld6vZ8600yPnNc_TsO2teNXJwTGOqx3wSe1p7VXqClWyA

2. பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் குழுவில் விரிவுரையாளருக்கான நேரடி நியமன வேலைவாய்ப்புகள்:

பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் குழுவான SCERT மற்றும் DIETஇன் கீழ் Senior Lecturers, Lecturer, Junior Lecturers பணிகளுக்கு நேரடி நியமன பணிக்கு 155 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Senior Lecturer பணிக்கு மொத்தம் 24 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, தொடர்புடைய பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்ட படிப்பில் 50 சதவிகித மதிப்பெண்களும், முதுநிலை ஆசிரியர் பயிற்சியில் 55 சதவிகித மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Lecturer பணிக்கு 82 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டமும், 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Lecturer பணிக்கு 49 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டமும், 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

Senior Lecturer பணிக்கு ரூ.56,900 முதல் ரூ.1,80,500 வரையிலும், Lecturer பணிக்கு ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரையிலும், Junior Lecturer பணிக்கு ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரையிலும் ஊதியம் வழங்கப்படும்.

31.7.2022ம் தேதியின் அடிப்படையில் 57 வயதுக்குள் இருப்பவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும் விரங்களை www.trb.tn.nic.in இணையதளத்தில் அறியலாம்.

https://www.isro.gov.in/?fbclid=IwAR328q96_zTzrUBsBXfQqNJvEcBK46KKuxoiKvp3zWvzecQK9iUpEAr0tuY

3. இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலிப்பணியிடங்கள்:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு உட்பட்ட Space Central School-இல் ஆசிரியர் பணியிடங்களுக்கு மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Post Graduate Teachers பணிக்கு மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் உள்ளன. கணித பாடப்பிரிவுக்கு 2 காலியிடங்களும், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடப் பிரிவுகளுக்கு தலா ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்புடன் இளைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும், ஆங்கிலப் புலமையுடன் கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு ரூபாய் 47,600 முதல் ரூ.1,51,100 வரை ஊதியம் வழங்கப்படும்.

18 வயது முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Trained Graduate Teachers பணிக்கு மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கணித பாடப்பிரிவில் 2 இடங்களும், உடற்கல்வியியல் பாடப்பிரிவில் 2 இடங்களும், இந்தி, வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளில் தலா ஒரு இடமும் காலியாக உள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல், உடற்கல்வி, இந்தி ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்புடன் இளநிலை ஆசிரியற் பயிற்சி படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை ஊதியம் வழங்கப்படும்.

18 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Primary Teachers பணிக்கு மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன், ஆசிரியர் பயிற்சிக்குரிய டிப்ளோமா படிப்பு அல்லது இளநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புடன் CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை ஊதியம் வழங்கப்படும்.

18 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் எழுத்து தேர்வு, கற்பிக்கும் திறன் தேர்வு மாற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 28.

https://www.iari.res.in/?fbclid=IwAR3FGy51svONwkCnUP3bi0IluMr0Msi2KxqgwSeEtVkFQbR6AewwgWg477Y

4 இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் உள்ள காலிப்பணியிடங்கள்:

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் Senior Research Fellowship, Young Professional - 2, Skilled Helper, Scientific Administrative Assistant ஆகிய பணிகளுக்கு 4 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Senior Research Fellowship பணிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க Genetics, Plant Breeding, Biotechnology, Life Science ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.31,000 ஊதியம் வழங்கப்படும்.

Young Professional - 2 பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க Life Science பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.35,000 ஊதியம் வழங்கப்படும்.

Scientific Administrative Assistant பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும்.

35 வயதிற்குள் இருப்பவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதியானவர்கள் ஆன்லைன் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.iari.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து haritha.agrico@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 31.

banner

Related Stories

Related Stories