தமிழ்நாடு

முதல்வரை பார்த்து கண்ணீர்விட்டு அழுத மாற்றுத்திறனாளி பெண்:அருகில் சென்று ஆதரவாக பேசிய நெகிழ்ச்சி சம்பவம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் நிகழ்வின்போது மாற்றுத்திறனாளி ஒருவர் முதலமைச்சரை தொட்டு கதறி அழுத காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல்வரை பார்த்து கண்ணீர்விட்டு அழுத மாற்றுத்திறனாளி பெண்:அருகில் சென்று ஆதரவாக பேசிய நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக கொங்கு பகுதிக்கு சென்றுள்ளார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமான மூலம் கோவை சென்ற முதல்வருக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.08.2022) கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வின்போது மாற்றுத்திறனாளி ஒருவர் முதலமைச்சரை தொட்டு கதறி அழுதார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த வீடீயோவை பார்த்த பலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories