தமிழ்நாடு

'அன்பென்ற மழை..' - காவல் காத்த செல்லப்பிராணிக்கு கல்லறை கட்டும் காவலர் குடும்பம்.. நெகிழ்ச்சி நிகழ்வு !

காவலர்கள் வீட்டில் காவலாளி போல் இருந்த ஒரு நாய் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து அதை புதைத்த இடத்திலேயே கல்லறை கட்ட நினைக்கும் குடும்பத்தினரின் செயல் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'அன்பென்ற மழை..' - காவல் காத்த செல்லப்பிராணிக்கு கல்லறை கட்டும் காவலர் குடும்பம்.. நெகிழ்ச்சி நிகழ்வு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மயிலாடுதுறை மாவட்டம் மகாதானபுரத்தை சேர்ந்தவர்கள் ஹரி பாஸ்கர் - கார்குழலி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், இவர்கள் இருவருமே காவல்துறையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் 4 நாய்கள் வளர்த்து வருகின்றனர். அந்த நாய்களில் 'சச்சின்' என்ற நாய் மிகவும் பிரியமானதாகும்.

'அன்பென்ற மழை..' - காவல் காத்த செல்லப்பிராணிக்கு கல்லறை கட்டும் காவலர் குடும்பம்.. நெகிழ்ச்சி நிகழ்வு !

இந்த நாயானது அந்த குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, அந்த கிராம மக்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக திகழ்ந்து வந்தது. தினமும் காலை சீக்கிரமாக எழும் இந்த பிராணியானது, வீட்டுக்காரர்களை எழுப்பிய பின் முன் கதவு கேட்டை திறந்து அங்கிருக்கும் சாலையை கடந்து ஒரு ஏரிக்கு செல்லும்.

அங்கே ஒரு சூப்பரான குளியல் போட்டு மீண்டும் அந்த நாய் சாலையை கடந்து வீடு திரும்பு. அவ்வாறு திரும்பும்போது, அங்கிருக்கும் டீ கடைக்காரர், சச்சினுக்கு தினமும் உண்பதற்காக BUN வைப்பார். அதையும் அது சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு செல்லும்.

'அன்பென்ற மழை..' - காவல் காத்த செல்லப்பிராணிக்கு கல்லறை கட்டும் காவலர் குடும்பம்.. நெகிழ்ச்சி நிகழ்வு !

அப்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த நாய் குளித்துவிட்டு வீடு திரும்பும்போது, சாலையை கடக்க முயன்றது. அப்படி கடந்த போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, அதன் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து நாயின் உடலை மீட்ட உரிமையாளர்கள் கண்ணீருடன் அதனை வீட்டின் அருகிலேயே இறுதிச்சடங்கு செய்து புதைத்தனர். மேலும் நாயின் மறைவிற்காக அந்த குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து மரியாதை செலுத்தினர்.

'அன்பென்ற மழை..' - காவல் காத்த செல்லப்பிராணிக்கு கல்லறை கட்டும் காவலர் குடும்பம்.. நெகிழ்ச்சி நிகழ்வு !

இந்த நிலையில், ஆசையாய் வளர்த்த நாய் பரிதாபமாக உயிரிழந்ததை தாங்கமுடியாத அந்த குழந்தைகள் நாய்க்கு ஒரு கல்லறை கேட் வேண்டும் என்று பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர். எனவே மகன்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மறைந்த 'சச்சின்' என்ற நாய்க்கு புதைத்த இடத்திலேயே ஒரு கல்லறை கட்ட குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

காவலர்கள் வீட்டிலேயே காவலாளி போல் இருந்த நாயின் மறைவையடுத்து அதை புதைத்த இடத்திலேயே கல்லறை கட்டபோகும் இந்த குடும்பத்தினரின் செயல் அனைவர் மத்தியிலும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories