தமிழ்நாடு

இளைஞரை வைத்து பல்கலைக்கழக தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த பா.ஜ.க நிர்வாகி: சிக்கியது எப்படி?

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் தேர்வில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளைஞரை வைத்து பல்கலைக்கழக தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த பா.ஜ.க நிர்வாகி:  சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவாரூரில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டத்திற்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இளைஞரை வைத்து பல்கலைக்கழக தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த பா.ஜ.க நிர்வாகி:  சிக்கியது எப்படி?

இந்நிலையில் இன்று தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதிக் கொண்டிருந்த இளைஞர் மீது கண்காணிப்பாளர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் அவர் திருவாரூரைச் சேர்ந்த திவாகர் மாதவன் என்பது தெரியவந்தது.

இளைஞரை வைத்து பல்கலைக்கழக தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த பா.ஜ.க நிர்வாகி:  சிக்கியது எப்படி?

மேலும், அவர் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் பாஸ்கர் என்பவருக்குப் பதிலாகத் தேர்வை எழுதுவதற்காக வந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories