தமிழ்நாடு

"ஏனென்றால் உன் பிறந்தநாள்.." - 80 வயது மூதாட்டிக்கு 80 வகையான சாப்பாடு.. நெகிழ வைத்த குடும்பத்தினர் !

80 வயது மூதாட்டிக்கு 80 வகையான உணவுகளை பரிமாறி அவரது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ள குடும்பத்தினர் செயல் அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

"ஏனென்றால் உன் பிறந்தநாள்.." - 80 வயது மூதாட்டிக்கு 80 வகையான சாப்பாடு.. நெகிழ வைத்த குடும்பத்தினர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்தவர் விமலாதேவி (வயது 80). இவர்களுக்கு 8 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர் 8 மகள்களும், 2 மகன்களும் இருக்கும் நிலையில், இவரது கணவர் சுப்புராம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.

"ஏனென்றால் உன் பிறந்தநாள்.." - 80 வயது மூதாட்டிக்கு 80 வகையான சாப்பாடு.. நெகிழ வைத்த குடும்பத்தினர் !

இதனால் விமலாதேவி தனது குழந்தைகளை ஒரு சிங்கிள் பேரண்ட்-ஆக (தனியாக) வளர்த்து வந்தார். மேலும் அவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து பேரன் பேத்திகளை கண்டுள்ளார். தனது மகன்கள், மருமகள்களுடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் இவர், சுமார் 5 தலைமுறைகளை கண்டெடுத்துள்ளார்.

"ஏனென்றால் உன் பிறந்தநாள்.." - 80 வயது மூதாட்டிக்கு 80 வகையான சாப்பாடு.. நெகிழ வைத்த குடும்பத்தினர் !

இந்த நிலையில், விமலாதேவி தற்போது தனது 80-வது பிறந்தநாளை தனது மகன்கள், மகள்கள், மருமகள்கள், மருமகள்கள், பேரன்-பேத்திகள், கொள்ளு பேரன்கள் என ஒட்டு மொத்த குடும்பத்துடன் மிக விமர்சியாக கொண்டாடியுள்ளார்.

"ஏனென்றால் உன் பிறந்தநாள்.." - 80 வயது மூதாட்டிக்கு 80 வகையான சாப்பாடு.. நெகிழ வைத்த குடும்பத்தினர் !

இந்த பிறந்தநாள் விழாவில் மூதாட்டி விமலாதேவிக்கு 80 வயது என்பதால், 80 வகையான இயற்கை முறையிலான உணவுகளை அவருக்கு இவரது குடும்பத்தினர் செய்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவருக்கு பணமாலை, பரிவட்டம் அணிவித்து அவரது பிறந்தநாள் விழாவை குடும்பத்தினர் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

"ஏனென்றால் உன் பிறந்தநாள்.." - 80 வயது மூதாட்டிக்கு 80 வகையான சாப்பாடு.. நெகிழ வைத்த குடும்பத்தினர் !

இந்த நவீன உலகில், தனது குழந்தைகளை பராமரிக்கவே அதிக பேருக்கு நேரம் இல்லமால் இருக்கும் நிலையில், 5 தலைமுறையை கண்டெடுத்த 80 வயதான மூதாட்டிக்கு அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரே பிறந்தநாள் கொண்டாடியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories