தமிழ்நாடு

சினிமா பட பாணியில் தப்பிக்க முயன்ற குற்றவாளிகள்.. புத்திசாலித்தனமாக மடக்கி பிடித்த தமிழ்நாடு போலிஸ்!

நள்ளிரவில் சினிமாபட பாணியில் தப்பிக்க முயன்ற குற்றவாளிகளை புத்திசாலித்தனமாக மடக்கி பிடித்த கரூர் மாவட்ட காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

சினிமா பட பாணியில் தப்பிக்க முயன்ற குற்றவாளிகள்.. புத்திசாலித்தனமாக மடக்கி பிடித்த தமிழ்நாடு போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேற்றிரவு இனோவா காரில் முதியவர் ஒருவரை கடத்தி கொண்டு குற்றவாளிகள் தப்பித்து வருவதாகவும், அவர்களை பிடிக்கும் படி கரூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது

அங்கிருந்து கொடுக்கப்பட்ட தகவலின் படி அரவக்குறிச்சி காவல் நிலைய சரகம் தேசிய நெடுஞ்சாலை 44, வேளஞ்செட்டியூரில் உள்ள டோல் பிளாசா அருகில் இயங்கி வரும் காவல் சோதனை சாவடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு பணியில் இருந்த முதல் நிலைக்காவலர் ஜாபர் சாதிக், மற்றும் கண்ணன், Gr I 212 கார்த்திகைகுமார் ஆகிய போலிஸார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இனோவா வாகனம் சோதனை சாவடியை கடப்பதாக சோதனைச் சாவடி ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்

பின்னர் அந்த காரை நிறுத்திய போது நிறுத்தாமல் தப்பித்தும், அரவக்குறிச்சி காவல் சரகம் அரவக்குறிச்சி பிரிவு தடாகோவில் அருகில் உள்ள முதல் நிலை காவல் அதிகாரி மற்றும் டோல் பிளாசா உதவி வாகன ஊழியர்கள் பேரிக்கார்டை வைத்து தடுத்து நிறுத்திய போதும், பேரிக்காடை இடித்துவிட்டு நிறுத்தாமல் கார் விரைந்துள்ளது

அரவக்குறிச்சி ஊரக உட்கோட்ட இரவு ரோந்து ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் பரமத்தி , காவல் ஆய்வாளருடன் துரத்திச் சென்றபோது கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய சரகம் ஆட்டையாம்பரப்பு கிராமம் அருகே பணியில் இருந்த தலைமை காவலர் குப்புராஜ் மற்றும் முதல் நிலை காவலர் வினோத் குமார் இருவரும் சாலையில் வந்த வாகனங்களை நிறுத்தி நள்ளிரவில் டிராபிக் ஜாம் செய்துள்ளனர்.

சுமார் 01.20 மணிக்கு சொகுசு காரில் வந்த ஐந்து பேரை போலிஸார் மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர். அதில் கீழ்கண்ட குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

பின்னர் பரன்கவுடா துரைராஜ்( நோ AMN . மங்களூர் கபாப் அருகில் விஜயா நகர், பெங்களூர்.(DRIVER)), 2) தாஸ் அந்தோணி ராஜ், ( ராஜ்குமார் கார்டன், 3 rd கிராஸ் பெங்களூர்), 3) டேனியல் /O.செப்ரின், I காலனி, பெங்களூர். 4) பவுல் மகாதேவ்( NO 6, 2 nd கிராஸ், லட்சுமய்யா லே-அவுட், KK அள்ளி, பெங்களூர்). 5) பெரோஸ் கான் 48/22 S/O.இஸ்மாயில் கான், NO 17, பார்தி நகர், பெங்களூர். ஆகிய 05 நபர்கள் என்றும், தூத்துக்குடியில் மாவட்டம் கோவில்பட்டியில் முதியவரை கடத்தி பணம் பறித்து வந்ததாகவும் மேற்கண்ட குற்றவாளிகள் தெரிவித்தனர்

இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி கிழக்கு காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை 04.20 மணியளவில் மேற்படி நபர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

banner

Related Stories

Related Stories