தமிழ்நாடு

'யாரும் ஏமாந்துடாதிங்க'.. Loan App-ல் சிக்கலில் மாட்டிக் கொண்ட பெண்: கண்ணீர் மல்க புகார்!

வாங்காத கடனை வாங்கியதாகக் கூறி ஆபாசப் படம் வெளியிட்டு மிரட்டிய Loan App மீது கோவை பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

'யாரும் ஏமாந்துடாதிங்க'.. Loan App-ல் சிக்கலில் மாட்டிக் கொண்ட பெண்: கண்ணீர் மல்க புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்க வாட்ஸ் ஆப்பில் Loan App லிங் ஒன்று வந்துள்ளது. இதை அவர் கிளிக் செய்து பார்த்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு 10 நாட்கள் கழித்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது.

'யாரும் ஏமாந்துடாதிங்க'.. Loan App-ல் சிக்கலில் மாட்டிக் கொண்ட பெண்: கண்ணீர் மல்க புகார்!

இதில் பேசிய நபர், 'நீங்கள் வாங்கிய கடன் பணத்தைக் கொடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் 'நான் கடன் எதுவும் வாங்கவில்லை. அதனால் பணத்தைக் கொடுக்க முடியாது 'என கூறியுள்ளார்.

இதையடுத்து சில நாட்கள் கழித்து அந்த Loan App நிறுவனம் ஆபாசப் படங்களை அனுப்பி அவரை மிரட்டியுள்ளது. பின்னர் அந்த பெண் இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

'யாரும் ஏமாந்துடாதிங்க'.. Loan App-ல் சிக்கலில் மாட்டிக் கொண்ட பெண்: கண்ணீர் மல்க புகார்!

இந்த புகார் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் Loan App-க்களை நம்பி யாரும் ஏமாந்துடாதிங்க என கண்ணீர் மல்க பாதிக்கப்ட்ட பெண் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories