தமிழ்நாடு

'சீனி சர்க்கரை சித்தப்பா; ஏட்டில் எழுதி நக்கப்பா' என்பதுபோல் இருக்கு நிர்மலா சீதாராமன் பேச்சு: சிலந்தி!

'ரொட்டி இல்லையா? கேக் சாப்பிடுங்கள்' என்ற தலைப்பில் முரசொலியில் இன்று வெளிவந்த சிலந்தி கட்டுரை.

'சீனி சர்க்கரை சித்தப்பா; ஏட்டில் எழுதி நக்கப்பா' என்பதுபோல் இருக்கு நிர்மலா சீதாராமன் பேச்சு: சிலந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற இரு அவைகளிலும் நாட்டில் விஷம்போல ஏறி வரும் விலை வாசி உயர்வு குறித்து நடந்த விவாதங்களுக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்த்திய பதிலுரைகள் பலரது விழியை உயர்த்த வைத்திருக்கிறது.

ரொட்டி கிடைக்காமல் வயிற்றுப் பசியால் வாடுகிறோம் - எனக் கதறிய பிரஞ்சு மக்களிடம் “ரொட்டி இல்லை என்றால் ; கேக் சாப்பிடு" என ஏளன உரை நிகழ்த்தியதை ரசித்த லூயி மன்னன் வரலாற்றைப் பலர் படித்திருப்பர்

இந்த வரலாற்றுச் சம்பவத்துக்கு எள்ளளவும் குறைந்ததாக இல்லை, நாடாளு மன்றத்தில் நமது ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்த்திய உரை!

"அன்றாடம் உயிர்வாழ உண்ணும் உணவுப் பொருட்களான அரிசி, தயிர், அவல், பால் போன்ற பொருட்களுக்கு ஜி.எஸ்.டி,. வரி விதித்து மக்களை வாட்ட லாமா?” என்று கேட்டால், ''சுடுகாட்டுக்கு ஜி.எஸ்.டி. வரி யில்லை , ஐ.சி.யூ. மற்றும் மருத்துவமனை படுக்கைக்கு, பிண அறைக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை” என, “ரொட்டி இல்லையா? கேக் சாப்பிடுங்கள்'' என்று 16 ஆம் லூயி மன்னனின் மனைவி கூறியது போல பதிலளித்துள்ளார்.

'சீனி சர்க்கரை சித்தப்பா; ஏட்டில் எழுதி நக்கப்பா' என்பதுபோல் இருக்கு நிர்மலா சீதாராமன் பேச்சு: சிலந்தி!

எங்களது ஆட்சியில் மக்கள் நிம்மதி பெற வேண்டுமென்றால், மருத்துவமனைப் படுக்கைக்குச் செல்லுங்கள்; அங்கே ஜி.எஸ்.டி. இல்லை ; மேலும் நிம்மதி வேண்டுமானால், மரணத்தோடு போராடும் ஐ.சி.யூ.வுக்குச் செல்லுங்கள். ஒரு வேளை உங்கள் வாழ்வா; சாவா போராட்டத்தில் உயிர்துறந்து சுடு காட்டுக்குச் செல்லுங்கள். அங்கே எல்லாம் வரி விதிக்கமாட்டோம் ; நீங்கள் அனாதைப் பிணமாக பிணக்கிடங்குக்குச் சென்றால் எங்கள் அரசின் வரி கிடையாது ; என்பது போல நிதியமைச்சர் பேசி யுள்ளதை எந்த வகை பேச்சில் சேர்ப்பது?

அண்ணாமலை போன்ற அரைக்கால் வேக்காட்டு அரசியல்வாதி வெட்டவெளி யில் நின்று பேசியிருந்தால் அதனைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பேசியது இந்திய நாட்டின் நிதி அமைச்சர்; பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் அமர்ந்திருக்கும் அவையில் இப்படி பேசியிருப்பதை அந்தக் கட்சி யினராலேயே ஜீரணித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே! |

"ஒருபுறம் விலைவாசி உயர்வு, விண்ணை முட்டுகிறது. மறு பக்கம் வரு மானத்தை அதிகரிக்க வழியே கிடைப்ப தில்லை. உணவுப் பொருட்களின் விலை ஏறிக் கொண்டே செல்லும் நிலையில் அதைக் குறைக்க எதுவும் செய்யாமல் இருக்கிறீர்களே” என நாடாளுமன்ற கழகக் குழு துணைத் தலைவர் கனிமொழி கருணாநிதி சுட்டிக்காட்டி, அதே நேரத் தில் பாரதிய ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே பேசியபோது, “வெங்காயம் விலை குறைந்து விட்டது, தக்காளி விலை குறைந்துள்ளது'' எனக் குறிப்பிட்டதை எடுத்துக்காட்டிய கனிமொழி கருணாநிதி,

"இந்த இரண்டையும் மட்டும் வைத்து மூன்று வேளையும் சட்னி அரைத்தா சாப்பிட முடியும்”- எனக் கேட்டார்.

'சீனி சர்க்கரை சித்தப்பா; ஏட்டில் எழுதி நக்கப்பா' என்பதுபோல் இருக்கு நிர்மலா சீதாராமன் பேச்சு: சிலந்தி!

அதற்கு நேரடியாக பதிலளிக்காத நிதி அமைச்சர், தனது பதிலுரையில், “உங்கள் அமைச்சர் அமர்ந்திருக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சிலில்தான் அரிசி போன்ற உணவுப் பொருட்களுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது” என்று பதிலளித்து

அடிப்படைப் பிரச்சினையிலிருந்து விலகி, 'பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டவருக்கு கொட் டைப்பாக்கு” விலையைக் கூறிய கதை போல நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த் தியுள்ளார்; நிதியமைச்சர்!

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒரு மாநில மந்திரியின் வாக்கின் மதிப்பு 2 சதவீதம்தான், அதேநேரத்தில் ஒன்றிய அரசுக்கு 33 சதவீத வாக்கு மதிப்பு உள்ளது. ஒன்றிய அரசின் ஆதரவோடு எடுக்கப்படும் எந்த முடிவையும் தனிப்பட்ட மாநில அரசால் தடுத்து நிறுத்த முடியாது. மேலும், அந்த கவுன்சிலின் நடைமுறை வழக்கப்படி தனித்தனியாக எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுக்கும் ஒப்புதல் கேட்கப்படுவது இல்லை! ஒட்டு மொத்தமாக எடுக்கப்பட்ட முடிவுகளின் பேரில்தான் அங்கு ஒப்புதல் கேட்கப்படுகிறது.

மேலும், ஒன்றிய அரசுக்கு உணவுப் பொருள்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராசன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

'சீனி சர்க்கரை சித்தப்பா; ஏட்டில் எழுதி நக்கப்பா' என்பதுபோல் இருக்கு நிர்மலா சீதாராமன் பேச்சு: சிலந்தி!

“ஜி.எஸ்.டி. கவுன்சிலில் எடுக்கப்படும் முடிவுகள், ஒன்றிய மாநில அரசுக ளுக்குப் பரிந்துரைக்கப்படுபவையே தவிர, அந்த அரசுகளை அது கட்டுப்படுத்தாது” - என உச்சநீதிமன்றமே கூறியுள்ள நிலையில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களோ, அதனைக் கருத்தில் கொள்ளாத நிலையில், மாநில நிதி அமைச்சர்களும் இருந்த கூட்டத்தில்தான் அந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறார். தானும், தனது அரசும் எடுத்த முடிவல்ல; பிரதமர் மோடி எடுத்த முடிவல்ல என்றெல்லாம் சப்பைக் கட்டுக் கட்டிக் கொண்டிருக்கிறார்!

ஜி.எஸ்.டி. கவுன்சில் எடுத்த முடிவு அரசுகளைக் கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய நிதி அமைச்சர் அப்பாவி மக்களின் வாழ்வை மேலும் வதைத்திடும் வகையில் விதித்த வரியை மறுபரிசீலனை செய்து - அதற்கு விலக்களிப்போம் என்று கூறியிருந்தால் அது சிறந்த ஜனநாயகப் பண்பாய் இருந்திருக்கும்!

பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வால் விழிபிதுங்கி செத்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்; அவர் களை மேலும் வதைப்பது போல அரிசி, தயிர், பருப்பு வகைகளுக்கும் வரிவிதித் திட வேண்டிய சூழ்நிலையிலும், ரூபாய் மதிப்பு சரிந்து வரும் காலகட்டத்தில் சிறு-குறு தொழில்கள் சீரழிந்து, வேலை யிழப்புகள் தொடர்கதையாகி வருகிறது என நடைமுறைச் சிக்கல்களை எடுத்து ரைத்தால், “உலகளாவிய ஏஜென்சிகள் கணக்கீட்டில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது. இந்தியப் பொருளா தாரம் வளர்ந்த நாடுகளின் பொருளாதார நிலையை விட உயர்ந்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளம் பலமாக உள்ளது” என்று, 'சீனி சர்க்கரை சித்தப்பா; ஏட்டில் எழுதி நக்கப்பா' - பாணியில் அம்மையார் பதிலளித்துள்ளார்.

'சீனி சர்க்கரை சித்தப்பா; ஏட்டில் எழுதி நக்கப்பா' என்பதுபோல் இருக்கு நிர்மலா சீதாராமன் பேச்சு: சிலந்தி!

இப்போதெல்லாம் பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அம்மையாரும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திருக்குறளை எடுத்துக்காட்டி உரை நிகழ்த்து வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்! வள்ளுவர் எழுதிய 'கொடுங்கோன்மை' என்ற ஒரு அதிகாரம் இவர்களது கண் களைத் திறக்க உதவிடும் என்பதால். அந்த அதிகாரத்தில் உள்ள ஒரு சில குறள் களை மட்டும் நினைவு படுத்து கிறோம்.

"நாடொறும் நாடிமுறை செய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும்"

(ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அவற்றிற்கு தக்கவாறு நடந்து கொள் ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும் - (கலைஞர் உரை))

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல் கோடிச்

சூழாது செய்யும் அரசு.

(நாட்டு நிலை ஆராயாமல் கொடுங் கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும் (கலைஞர் உரை)).

"அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை"

(கொடுமை பொறுக்க முடியாமல் மக் கள் சிந்தும் கண்ணீர், ஆட்சியை அழிக் கும் படைக் கருவியாகும் (கலைஞர் உரை)).

குறளை சம்பிரதாயத்திற்காக மேற் கோள் காட்டினால் மட்டும் போதாது; குறள் தரும் பாடங்களைப் படித்து பொருள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

banner

Related Stories

Related Stories