தமிழ்நாடு

மனைவியை ஆபாசமாக பேசிய நபர்.. குத்தி கொலை செய்த கணவர் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

மனைவியை ஆபாசமாக பேசி கத்தியை காட்டி மிரட்டிய நபரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

மனைவியை ஆபாசமாக பேசிய நபர்.. குத்தி கொலை செய்த கணவர் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (45). இவர் நாகல்கேணி மீன் மார்கெட்டில் மீன் வெட்டும் வேலை செய்து வருகிறார். அதே இடத்தில் மீன் வெட்டும் வேலை செய்யும் சிரஞ்சீவி (24), என்பவரின் மனைவியை நேற்று பாண்டியன் வீட்டிற்கே சென்று சிரஞ்சீவியின் மனைவி பவானியை ஆபாசமாக திட்டி கத்தியை காட்டி மிரட்டிவிட்டு வந்துள்ளார்.

இந்த தகவலை இன்று கேள்விபட்ட சிரஞ்சீவி தனது நண்பரான ஹரி என்பரோடு, குடிபோதையில் சென்று பாண்டியன் வீட்டின் அருகே பொழிச்சலூர், விநாயகா நகரில் சாலையில் வைத்து பாண்டியனை கத்தியால் இடது விலா மற்றும் தலையில் வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்றார்.

அங்கிருந்த பொது மக்கள் அவர்களை மடக்கி பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து சென்ற சங்கர் நகர் போலிஸார் பாண்டியனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக ரேலா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இருவரையும் கைது செய்த போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் இருந்த மனைவியை கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக பேசியதால் கொலை செய்ததாக சிரஞ்சீவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories