தமிழ்நாடு

கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக கவிழ்ந்து விபத்து : சுற்றுலா சென்ற மருத்துவ மாணவி பலி - 5 பேர் படுகாயம்!

ஆம்பூர் அருகே சாலை விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழப்பு அவருடன் பயணித்த 5 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக கவிழ்ந்து விபத்து : சுற்றுலா சென்ற மருத்துவ மாணவி பலி - 5 பேர் படுகாயம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை தனியார் மருத்துவ கல்லூரி (ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி) 3 மாணவிகள் மற்றும் 3 மாணவர்கள் மொத்தம் 6 பேர் சென்னையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வழியாக ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலை சுற்றுலா சென்றுள்ளனர்.

சென்று கொண்டிருந்தபோது சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பெயர் பலகை மீது மோதி தாறுமாறாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4ஆம் ஆண்டு படித்து வரும் மருத்துவக் கல்லூரி மாணவி ஷண்முகி சவுதிரி நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் காரில் பயணித்த 5 மாணவர்கள் பலத்த காயங்களுடன் அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஒரு மாணவன் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்கள் சுற்றுலா சென்ற போது நடந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

banner

Related Stories

Related Stories