தமிழ்நாடு

17 ஆண்டுகளில்.. முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய திமிங்கல விமானம்: காரணம் என்ன?

உலகத்திலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான திமிங்கல வடிவிலான, "ஏா்பஸ் பெலுகா" முதல் முறையாக சென்னை விமானநிலையத்திற்கு வந்தது

17 ஆண்டுகளில்.. முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய திமிங்கல விமானம்: காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு ஏர்பஸ் விமானம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பயணிகள் விமானம், சரக்கு விமானங்களையும் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், பெரிய ரக பொருட்களைச் சரக்கு விமானத்தில் ஏற்றிச் செல்வதற்கு வசதியாக, திமிங்கல வடிவில், சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் எனும் "பெலுகா" A300-608ST என்ற புதிய சரக்கு விமானத்தை, 1995 ஆம் ஆண்டில் ஏர்பஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.

17 ஆண்டுகளில்.. முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய திமிங்கல விமானம்: காரணம் என்ன?

இந்த சரக்கு விமானத்தில் ஓரே நேரத்தில் 47 ஆயிரம் கிலோ எடையிலான சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் உடையது.இந்நிலையில் இந்த சரக்கு விமானம் முதல் முறையாகச் சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்தது.

இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,"ஏர்பஸ் பெலுகா சரக்கு விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து, சென்னைக்கு இன்று காலை வந்தது.

விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக இந்த சரக்கு விமானம் வந்தது. இந்த வகை பெரிய சரக்கு விமானம், சென்னைக்கு வருவது இதுவே முதல் முறை. எரிபொருள் நிரப்பிய பின், சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டின் தலைநகர் பட்டாயாவிற்கு புறப்பட்டுச் சென்றது" என தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories