தமிழ்நாடு

தூங்கி கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர்.. ஜன்னல் வழியே ஓட்டை போட்டு 40 பவுனை ஆட்டைய போட்ட கும்பல் !

வீட்டிற்குள் ஆட்கள் இருக்கும்போதே, ஜன்னலை உடைத்து 40 பவுன் தங்க நகை, 50 ஆயிரம் பணம் கொள்ளையடித்த கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூங்கி கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர்.. ஜன்னல் வழியே ஓட்டை போட்டு 40 பவுனை ஆட்டைய போட்ட கும்பல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பர்மா காலனியை சேர்ந்தவர் ஆனந்த குமார். 61 வயதாகும் இவர், முன்னாள் BSNL ஊழியர் ஆவார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். இவரது

சம்பவத்தன்று இவரும், இவரது மகனும் வீட்டினுள் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது பக்கத்துக்கு அறையில் எதோ சத்தம் கேட்டுள்ளது. ஆனால் அந்த முதியவரோ, தனது மனைவி தான் அந்த அறையில் இருப்பதாக எண்ணி மீண்டும் உறங்கியுள்ளார்.

தூங்கி கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர்.. ஜன்னல் வழியே ஓட்டை போட்டு 40 பவுனை ஆட்டைய போட்ட கும்பல் !

இந்த நிலையில் மறுநாள் காலை அந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் பதற்றமடைந்த முதியவர், அவரது மகனிடமும், வீட்டின் எதிரில் வசிக்கும் மகளிடமும் கூறியுள்ளார். ஆனால் மகளோ அம்மா தனது வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். இதனால் குழப்பமடைந்த ஆனந்த குமார், தனது மகனை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புறமாக சென்று பார்க்கையில், அந்த அறையிலுள்ள ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டின் நபர்கள், ஜன்னல் வழியே உள்ளே சென்று பார்க்கையில், கதவு உள்பக்கம் தாழிட்டு இருப்பதாய் கண்டனர். மேலும் அந்த அறையில் இருந்த பீரோவில் உள்ள 40 பவுன் தங்க நகை, வைர மோதிரம் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஐம்பதாயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

தூங்கி கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர்.. ஜன்னல் வழியே ஓட்டை போட்டு 40 பவுனை ஆட்டைய போட்ட கும்பல் !

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து முதியவர் ஆனந்தகுமார், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காரின் பேரில் வழக்கு பதிவு செய்த காரைக்குடி வடக்கு காவல் துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். வீட்டில் ஆள் இருக்கும்போதே கொள்ளையர்கள் ஜன்னலை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories