தமிழ்நாடு

7 வயது மகளை வளர்க்க முடியாத விரக்தி.. கழுத்து நெரித்து கொலை செய்த தந்தை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

7வயது மகளை கொலை செய்த தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

7 வயது மகளை வளர்க்க முடியாத விரக்தி.. கழுத்து நெரித்து கொலை செய்த தந்தை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பசவராஜா ஈரப்பா மகதும்மா. இவருக்கு 7 வயதில் சங்கீதா என்ற மகள் இருந்தார். கூலி வேலை செய்து வரும் பசவராஜாவால் தனது மகளை வளர்க்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

7 வயது மகளை வளர்க்க முடியாத விரக்தி.. கழுத்து நெரித்து கொலை செய்த தந்தை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

மேலும் மகளை நன்கு வளர்க்க வேண்டும், படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். இதனால் அவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த பசவராஜா தான் பெற்ற மகள் என்றும் பாராமல் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் 2016ம் ஆண்டு கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

7 வயது மகளை வளர்க்க முடியாத விரக்தி.. கழுத்து நெரித்து கொலை செய்த தந்தை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

இந்த வழக்கு சிக்கோடி 7வது கூடுதல் நீதிமன்றம் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், மகளைக் கொன்ற பசவராஜாவுக்குஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories