தமிழ்நாடு

“போலிஸ் பாதுகாப்போடு பரிட்சை எழுதிவிட்டுச் சென்றேன்”: கல்லூரி நினைவலைகளை பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

த மிசா சட்டத்தில் சென்னை சிறையில் சிறைவாசியாக இருந்தபோது தான், அங்கிருந்து போலீஸ் பாதுகாப்போடு இந்தக் கல்லூரிக்கு வந்து நான் பரிட்சை எழுதிவிட்டுச் சென்றேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

“போலிஸ் பாதுகாப்போடு பரிட்சை எழுதிவிட்டுச் சென்றேன்”: கல்லூரி நினைவலைகளை பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.07.2022) சென்னை, மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- ”நான் தமிழகத்தினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்று, இந்த ஓராண்டு காலத்திற்குள்ளாக எத்தனையோ நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றிருக்கிறேன். அரசு நிகழ்ச்சிகளில், கழக நிகழ்ச்சிகளில் இதுபோன்ற பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளில், பள்ளி நிகழ்ச்சிகளில், பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டு இருக்கிறேன்.

ஆனால், அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்கிறபோது எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைவேனோ அதைவிட பல மடங்கு மகிழ்ச்சியை நான் படித்த கல்லூரியான இந்த மாநிலக் கல்லூரியில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியின்போது அதிகமான மகிழ்ச்சியை நான் அடைந்து கொண்டு இருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், சிறிது இறுமாப்புடன் நின்று கொண்டிருக்கிறேன்.

“போலிஸ் பாதுகாப்போடு பரிட்சை எழுதிவிட்டுச் சென்றேன்”: கல்லூரி நினைவலைகளை பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

முதலில் கையில் பட்டங்களுடனும் - மனதில் கனவுகளுடனும் அமர்ந்திருக்கும் நம்முடைய மாணவ – மாணவியர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும்! அமைய வேண்டும் என்ற வேண்டுகோள் மட்டுமல்ல, அமையும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டும் நான் உங்களை வாழ்த்த வரவில்லை. இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற முறையிலும் உங்களை வாழ்த்துவதற்காக நான் வந்திருக்கிறேன். உங்களுடைய சீனியர் - என்ற அடிப்படையில் என்னுடைய வாழ்த்துகளைத் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இங்கு எல்லோரும் சொன்னார்கள், 1972-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15-ஆம் நாள், இந்தக் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாட மாணவனாகச் நான் சேர்ந்து படித்தேன். முழுமையாக என்னைக் கல்வியில் ஈடுபடுத்திக் கொண்டேனா என்றால் இல்லை. ஏனென்றால், அப்போதே எனக்கு அரசியல் ஆர்வம் வந்துவிட்டது. அதுவும் அதிகமான ஆர்வம் கொண்டவனாக, நான் நேரடியாக அரசியலில் இறங்கி விட்டேன்.

“போலிஸ் பாதுகாப்போடு பரிட்சை எழுதிவிட்டுச் சென்றேன்”: கல்லூரி நினைவலைகளை பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

1971-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றிக்காக, அதனுடைய பிரச்சாரத்திற்காக தேர்தல் பிரச்சார நாடகங்களை ஊர் ஊராகச் சென்று - தொகுதி தொகுதியாகச் சென்று நான் நடத்தினேன். அந்தக் காரணத்தால், என்னால் முழுமையாகப் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது.

படிப்பில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளாத நான், இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்ட நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்திருக்கக்கூடிய 500-க்கும் மேற்பட்டவர்கள், அதாவது மிசா என்ற அந்த கொடுமையான சட்டத்தை, நெருக்கடி நிலையை, திராவிட முன்னேற்றக் கழகம் அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, அதை எதிர்த்த காரணத்தால், கலைஞர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த கழக ஆட்சி அன்றைக்கு கலைக்கப்பட்டது.

கலைக்கப்பட்டவுடன் 500-க்கும் மேற்பட்ட கழகத்தைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டார்கள். நான் சென்னை சிறைச்சாலையில் ஓராண்டு காலம் இருந்தேன். நினைத்து பார்க்கிறேன். அந்த மிசா சட்டத்தில் சென்னை சிறையில் சிறைவாசியாக இருந்தபோது தான், அங்கிருந்து போலீஸ் பாதுகாப்போடு இந்தக் கல்லூரிக்கு வந்து நான் பரிட்சை எழுதிவிட்டுச் சென்றேன். அதையெல்லாம் இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.

இப்போது தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக உயர்ந்துள்ளேன் என்று சொல்லி, இதனையே நீங்கள் அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது! விதிவிலக்குகள் என்பது விதிகள் ஆகாது! இதைத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டுவார்கள்!

அந்த வகையில் கல்வியைக் கட்டாயக் கடமையாக வலியுறுத்தி, இன்று ஒரு இயக்கமாகவே அதை நான் தொடங்கியிருக்கிறேன்.

கல்விதான் யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து! அத்தகைய அறிவுச் சொத்துக்களை உருவாக்கித் தரக்கூடிய மகத்தான கல்லூரிதான், இந்த மாநிலக் கல்லூரி என்பதை நான் இங்கே பெருமையோடு பதிவு செய்ய விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories