தமிழ்நாடு

ஜூலை 4ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பின் முழு விபரம் இதோ!

ஜூலை 4ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

ஜூலை 4ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பின் முழு விபரம் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் ஜூலை 4ம் தேதி உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு"தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில், தொழில் துறையில் பெரும் வளர்ச்சியும், மறுமலர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தொழில் துறையில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

ஜூலை 4ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பின் முழு விபரம் இதோ!

சர்வதேச தொழில் துறை நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் பல்வேறு, முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதன் அடுத்த கட்டமாக ஜூலை 4 ந் தேதி சென்னை தாஜ் ஹோட்டல் மாபெரும் முதலீடாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் 60 முக்கிய ஒப்பந்தங்கள் பெரும் நிறுவனங்களுடன் கையெழுத்தாக உள்ளது. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக 12 திட்டங்கள் அறிவிக்க உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 70 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக உள்ளது.

ஜூலை 4ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பின் முழு விபரம் இதோ!

அதேபோல், கோவை, மதுரை மாவட்டத்தில் லித்தியம் battery, பசுமை ஹைட்ரஜன் சூரிய சக்தி , உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்து, வேலையில்லா இளைஞர்கள் பயன் பெறுவர்.

இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களில் 78 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. வட தமிழகத்தில் ரூ.5,300 கோடி முதலீடும், மத்திய தமிழகத்தில் ரூ.285 கோடி முதலீடும் ஈர்க்கப்பட்டுள்ளது. தென்தமிழகத்தில் ரூ.16,750 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories