தமிழ்நாடு

ரேபிஸ் நோய் தாக்கி மாணவி பலி.. நாய் கடித்தால் செய்ய வேண்டியது இதுதான்! - மருத்துவர்கள் சொல்வது என்ன?

நாய் கடித்து 18 வயதான கல்லூரி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிவகங்கை பொதுநல மருத்துவர் விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரேபிஸ் நோய் தாக்கி மாணவி பலி.. நாய் கடித்தால் செய்ய வேண்டியது இதுதான்! - மருத்துவர்கள் சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரளாவை சேர்ந்த ஸ்ரீலட்சுமி (18) என்ற கல்லூரி மாணவி, நாய் கடி ஏற்பட்டு 1 மாதத்திற்கு பிறகு 'ரேபிஸ்' நோய் தாக்கி நேற்று உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று விலங்குகள் கடித்து சாதாரணமாக விட்டு பிறகு உயிரிழப்பவர்கள் ஏராளம்.

இந்நிலையில் விலங்கு கடி மூலம் பரவும் 'ரேபிஸ்' நோய் குறித்து சிவகங்கை மாவட்ட பொது நல மருத்துவர் Dr. அ.ப.ஃபரூக் அப்துல்லா விழுப்புணர்வு பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://www.kalaignarseithigal.com/india/2022/07/01/18-years-old-kerala-student-died-in-rabies-infecton
ரேபிஸ் நோய் தாக்கி மாணவி பலி.. நாய் கடித்தால் செய்ய வேண்டியது இதுதான்! - மருத்துவர்கள் சொல்வது என்ன?

அதில், "நேற்று கேரளாவில் வெறிநாய் கடித்து ரேபிஸ் நோய் ஏற்பட்டு ஒரு கல்லூரி மாணவி மரணமடைந்துள்ளார் என அறிந்து வேதனை அடைந்தேன். இறந்த சகோதரியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வு கட்டுரையைத் தொடங்குகிறேன்.

அன்புள்ள சொந்தங்களே, நாய்க்கடி/ நாய் நகத்தால் பிராண்டுதல், பூனைக்கடி/ பூனை நகத்தால் பிராண்டுதல், குரங்குக் கடி இன்னபிற காட்டு விலங்குகளிடம் கடி பட்டால், உடனே கடிபட்ட இடத்தை சோப் போட்டு நன்றாக 15 நிமிடம் தேய்த்துக் கழுவ வேண்டும். இதன் மூலம் கடிபட்ட இடத்தில் இருந்து வைரஸை தொற்று நீக்கம் செய்ய முடியும். இதன் மூலம் 90% வைரஸை காலி செய்து விடலாம்.

ரேபிஸ் நோய் தாக்கி மாணவி பலி.. நாய் கடித்தால் செய்ய வேண்டியது இதுதான்! - மருத்துவர்கள் சொல்வது என்ன?

எனவே கடிபட்ட இடத்தை சோப் போட்டு 15 நிமிடம் கழுவுவது முக்கியமான முதல் பணி. இதைச் செய்து விட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று டிடி எனும் டெட்டானஸ் பாக்டீரியாவுக்கு எதிரான தடுப்பூசியை பெற வேண்டும். அதன் பிறகு கடிபட்ட இடத்தை மருத்துவர் பரிசோதிப்பார். கடிபட்ட இடத்தில் நகம் பிராண்டிய இடத்தில் தோல் உரியாமல் ரத்தம் எதுவும் வராமல் எந்தத் தடமும் இல்லாமல் இருந்தால் இவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி தேவையில்லை.

ரேபிஸ் நோய் தாக்கி மாணவி பலி.. நாய் கடித்தால் செய்ய வேண்டியது இதுதான்! - மருத்துவர்கள் சொல்வது என்ன?

விலங்கானது புண் எதுவும் ஏற்படாத தோலில் நக்குவதால் ரேபிஸ் பரவுவதில்லை. அதுவே கடிபட்ட இடத்தில் தோல் உரிந்து லேசாக இருந்தாலோ/ லேசாக தோலில் பிராண்டியிருந்தாலும், இவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்.

  • கடித்த அன்று (24 மணிநேரத்திற்குள்) முதல் ஊசி

  • கடித்ததில் இருந்து மூன்றாவது நாள்

  • கடித்ததில் இருந்து ஏழாவது நாள்

  • கடித்ததில் இருந்து 28 வது நாள் என நான்கு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும்

அதுவே கடிபட்ட இடத்தில் தோல் கிழிந்து போகும் அளவு அல்லது ரத்தம் வெளியேறும் அளவு காயம் ஏற்பட்டிருந்தால் / ஏற்கனவே புண்ணாகிய தோலில் நக்கியிருந்தாலும் / விலங்கின் எச்சில் வாய்/ கண் போன்ற பகுதிகளில் பட்டிருந்தாலும், உடனே ரேபிஸ்க்கு எதிரான இம்யூனோ குளோபுளின் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கடிபட்ட இடத்தைச் சுற்றிலும் இந்த பிரத்யேக தடுப்பூசி போடப்படுகின்றது.

ரேபிஸ் நோய் தாக்கி மாணவி பலி.. நாய் கடித்தால் செய்ய வேண்டியது இதுதான்! - மருத்துவர்கள் சொல்வது என்ன?

இத்துடன் சேர்த்து ஏற்கனவே கூறிய நான்கு தவணை ரேபிஸ் தடுப்பூசியும் கட்டாயமாகப் போட்டுக்கொள்ள வேண்டும். கடித்தது வீட்டு நாயோ, தெரு நாயோ, வீட்டு பூனையோ, தெருப் பூனையோ, ஏற்கனவே அந்த விலங்குகளுக்கு தடுப்பூசி போட்டிருந்தாலும் சரி, தடுப்பூசி போடாமல் விட்டிருந்தால் சரி, கடிபட்ட மனிதர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். ரேபிஸ் 100% உயிர் கொல்லி நோயாகும். நோய் வந்தால் காப்பாற்றுவது இயலாத காரியம். வருமுன் காப்பதே நலம்.

விலங்குகளிடம் சரியான இடைவெளி விட்டுப் பழகுவது சிறந்தது. வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு முறையாக தடுப்பூசி செலுத்தி பராமரிப்பது நமது கடமை. எனினும் அவற்றிடம் இருந்து கடிபட்டால் உடனே ரேபிஸ் தடுப்பூசி பெற்று நம் உயிரைக் காத்துக் கொள்வதும் நமது முக்கிய பணி 'ரேபிஸ்' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நோயினால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க உதவும்" என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து Dr. அ.ப.ஃபரூக் அப்துல்லாவின் இந்த சமூகவலைதள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories