தமிழ்நாடு

“இனி தனியார் பள்ளியிலும் 25% இட ஒதுக்கீடு கட்டாயம்..” : ஆணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இட ஒதுக்கீடை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

“இனி தனியார் பள்ளியிலும் 25% இட ஒதுக்கீடு கட்டாயம்..” : ஆணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12(1) (சி)-ன்சட்டத்தின்படி, அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கையின்போது குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

அதன்படி மாநில அதிகார வரம்பின் கீழ் செயல்படும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இட ஒதுக்கீடை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

“இனி தனியார் பள்ளியிலும் 25% இட ஒதுக்கீடு கட்டாயம்..” : ஆணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''2021- 22ஆம் கல்வியாண்டில் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்புகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தனியார் பள்ளிகளில் உள்ள காலி இடங்கள் குறித்த விவரங்களை ஜூன் 24ஆம் தேதி முதல் பெறவேண்டும்.

அதையடுத்து 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பள்ளி அறிவிப்புப் பலகையிலும், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும் ஜூலை 2ஆம் தேதி வெளியிடவேண்டும்.

பள்ளிகள் ஜூலை 3 ஆம் தேதி முதல் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்க வேண்டும். அதையடுத்துத் தங்களின் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர் ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை "https://rte.tnschools.gov.in " என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

“இனி தனியார் பள்ளியிலும் 25% இட ஒதுக்கீடு கட்டாயம்..” : ஆணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

பள்ளியில் உள்ள இடங்களை விட அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் ஆகஸ்ட் 10 அன்று குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதே தினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரங்களைப் பள்ளி அறிவிப்புப் பலகையிலும், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும் வெளியிடவேண்டும். ஆகஸ்ட் 14ஆம் தேதி மாவட்ட அளவிலான கல்வி அதிகாரியிடம், சேர்க்கை விவரங்களைத் தனியார் பள்ளிகள் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

“இனி தனியார் பள்ளியிலும் 25% இட ஒதுக்கீடு கட்டாயம்..” : ஆணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

மேலும் பொதுப்பிரிவில் 31%, எஸ்டி பிரிவில் 1%, எஸ்சி பிரிவில் 18%, எம்பிசி பிரிவில் 20%, பிசிஎம் பிரிவில் 3.5%, பிசி பிரிவில் 26.5% இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும். அதுமட்டுமின்றி மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பொதுப்பிரிவினருக்கு 31% இட ஒதுக்கீட்டுக்கான பட்டியலை தயாரிக்க வேண்டும்” என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories