தமிழ்நாடு

ஒன்றிய இணையமைச்சர் பங்கேற்ற யோகா தின விழாவில் வைரலான ‘T-Shirt’ - சம்பவம் செய்த இளைஞர் !

புதுச்சேரியில் சமூக ஆர்வலர் ஒருவர் "ஹிந்தி தெரியாது போடா" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த டி-ஷர்ட் அணிந்து வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒன்றிய இணையமைச்சர் பங்கேற்ற யோகா தின விழாவில் வைரலான ‘T-Shirt’ - சம்பவம் செய்த இளைஞர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரியில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்ற சர்வதேச யோகா தின விழாவில், சமூக ஆர்வலர் ஒருவர் "ஹிந்தி தெரியாது போடா" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த டி-ஷர்ட் அணிந்து வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சர்வதேச யோகா தினத்தையொட்டி ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் புதுச்சேரி அரசு இணைந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் 2 கி.மீட்டர் தூரத்திற்கு யோகா தினம் நடைபெற்றது. இதில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

ஒன்றிய இணையமைச்சர் பங்கேற்ற யோகா தின விழாவில் வைரலான ‘T-Shirt’ - சம்பவம் செய்த இளைஞர் !

இதனிடையே ஒன்றிய அரசின் தொடர் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெய்ன்ராஜ் ஏழுமலை என்பவர் "ஹிந்தி தெரியாது போடா" என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த டி-ஷர்ட் அணிந்துகொண்டு, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories