தமிழ்நாடு

தன்னைத் தானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்.. தாயை பயமுறுத்தும் போது நடந்த விபரீதம்!

மதுரையில், தாயைப் பயமுறுத்துவதாக நினைத்து தன்னைத்தானே கழுத்தை பிளேடால் இளைஞர் அறுத்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னைத் தானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..  தாயை பயமுறுத்தும் போது நடந்த விபரீதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை மாவட்டம், பரவை பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் சரவண விஷால். இவர் கல்லூரி முடித்துவிட்டு வேலைக்கு எதுவும் செல்லாம் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று, தாயை பயமுறுத்துவதாக நினைத்து விஷால் தன்னைத் தானே கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டுள்ளார். இதைப்பார்த்துப் அவரது தாய் அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார்.

தன்னைத் தானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..  தாயை பயமுறுத்தும் போது நடந்த விபரீதம்!

இவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் பார்த்தபோது சரவண விஷால் உயிரிழந்தது தெரியவந்தது.

பிறகு போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், சரவண விஷால் ஒரு வருடமாக மன நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

தன்னைத் தானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..  தாயை பயமுறுத்தும் போது நடந்த விபரீதம்!

சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய அவர் தாயைப் பயமுறுத்துவதாக நினைத்து தன்னைத் தானே பிளேடால் அறுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. தாயைப் பயமுறுத்துவதாக நினைத்து தன்னைத்தானே கழுத்தை பிளேடால் இளைஞர் அறுத்துக் கொண்டு உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories