தமிழ்நாடு

‘ஆப்ரேஷன் கந்துவட்டி’.. அதிக வட்டி கேட்டு பணம் பறித்த 4 பேர் கைது : போலிஸ் எடுத்த அதிரடி ஆக்சன்!

ஆப்ரேஷன் கந்துவட்டி மூலம் கந்துவட்டி சட்டத்தில் 4 நபர்கள் மீது காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளார்.

‘ஆப்ரேஷன் கந்துவட்டி’.. அதிக வட்டி கேட்டு பணம் பறித்த 4 பேர் கைது : போலிஸ் எடுத்த அதிரடி ஆக்சன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு காவல் கண்காணிப்பாளர் காஞ்சிபுரம் டாக்டர் சுதாகர் உத்தரவின் போலிஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மளிகை தெருவைச் சேர்ந்த நாகூர் மீரான் (37) சின்னசாமி நகரைச் சேர்ந்த மகாதேவன் என்பவரிடமிருந்து ரூபாய் 1,70,000 /- கடன் வாங்கி 5,14,300/-வட்டியும் கட்டியுள்ளார். ஆனால் மகாதேவன் மேலும் ரூபாய் 1.30,000 /- அசல் மற்றும் கந்துவட்டி கேட்டு மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக நாகூர் மீரான் கொடுத்த புகாரை பெற்று சிவகாஞ்சி போலிஸார் வழக்கு பதிவு செய்தனர். இதேபோன்று உத்திரமேரூர் காவல்நிலையம் பஜார் வீதி, பிரபு அவெனயூவைச் சேர்ந்த அப்துல் ரவுப் ( 49 ) கருவேப்பம்பூண்டி காலனியைச் தணிகைவேல் என்பவரிடம் ரூபாய் 1.50,000 / - கடன் பெற்றுள்ளார். அதற்கு மாதா மாதம் வட்டி கட்டிவந்துயுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பு ரூபாய் அப்துல்ரவுப் தணிகைவேலிடம் 70,000 /- கொடுத்தபோது அவர் இப்பணத்தை அசலில் கழிக்காமல் கந்துவட்டியாக கொடுக்க வேண்டும் என்று கூறி வாங்க மறுத்துவிட்டு, தணிகைவேல் இனிமேல் எனக்கு பணம் தராமல் கடையை திறக்க கூடாது என அசிங்கமாக பேசி மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக அப்துல் ரவுப் கொடுத்த புகாரில் பேரில் உத்திரமேரூர் காவல்நிலைய போலிஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பேங்களூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த ரஞ்சித்குமார்( 44 ), கச்சிப்பட்டு காலனி , கருக்குத் தெருவைச் சேர்ந்த சிம்பு ( எ ) வினோத்குமாரிடம் வீட்டு பத்திரத்தை கொடுத்துவிட்டு ரூபாய் 1,00,000 / - கடன் பெற்றுக்கொண்டு அதற்கு வட்டியாக ரூபாய் 72,000 / - கட்டியுள்ளார்.

இந்நிலையில் ரஞ்சித்குமார் சிம்புவிடம் சென்று பத்திரத்தை திரும்ப கேட்டபோது 4 மாதம் வட்டி பாக்கி மொத்தம் 1,27,840 / கொடுத்தால்தான் பத்திரம் தருவதாகவும், பணத்தோடு ஒரு வாரத்திற்குள் வரவில்லையென்றால் பத்திரம் கிடையாது எனவும் மீறி கேட்டால் தொலைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய வழக்கு பதிவு செய்துயுள்ளார் மேலும், காஞ்சிபுரம், பல்லவர்மேடு கிழக்கு பகுதியைச் சேர்ந்த சந்தானம் ( 36 ) காஞ்சிபுரம், பாவாசாகிப் தெருவைச் சேர்ந்த பூபதி ரூபாய் 1,50,000 / - கடன் வாங்கியிருந்தார். அதற்கு வட்டியாக இதுவரை ரூபாய் 2,21,000 / - கட்டிய நிலையில் பூபதி மேலும் ரூபாய் 1,00,000 / - அசல் மற்றும் -கந்துவட்டி கேட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக சந்தானம் கொடுத்த புகாரை பெற்று சிவகாஞ்சி காவல் நிலைய போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேற்படி கந்துவட்டி குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. கந்து வட்டிக்காரர்கள் நான்கு பேரையும் போலிஸார் கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories