தமிழ்நாடு

“உம்ரான் மாலிக் - அர்ஷ்தீப் சிங் டெத் இருவருமே சரியான வீரர்கள்” : இந்திய அணி உணரவேண்டியது என்ன ?

இரண்டாவது போட்டிக்கும், மூன்றாவது போட்டிக்கும் இடையே ஒரு நாள் இடைவெளியே இருப்பதால், இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“உம்ரான் மாலிக் - அர்ஷ்தீப் சிங் டெத் இருவருமே சரியான வீரர்கள்” : இந்திய அணி உணரவேண்டியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடர் தொடங்கும்போது இந்தியா தான் இத்தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடர் வெற்றிகளை சந்தித்து வரும் இந்திய அணி, இந்தத் தொடரிலும் அதைத் தொடர்ந்து உலக சாதனை படைக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், ரிசப் பண்ட் தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கிறது.

இரண்டு போட்டிகளிலுமே இலக்கை டிஃபண்ட் செய்ய முடியாமல் தோற்றிருக்கிறது இந்தியா. அதனால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இழக்கும் நிலையில் இருக்கிறது. புதுடெல்லியில் நடந்த முதல் போட்டியில் 211 ரன்கள் எடுத்த இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கட்டாக்கில் நடந்த இரண்டாவது போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இரண்டாவது போட்டிக்கும், மூன்றாவது போட்டிக்கும் இடையே ஒரு நாள் இடைவெளியே இருப்பதால், இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஐ.பி.எல் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம் வீரர் உம்ரன் மாலிக்குக்கு மூன்றாவது டி20 போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்று இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கரிடம் கேட்கப்பட்டது. உம்ரன் மாலிக் பற்றிக் கேட்டதும், அவரைப் புகழ்ந்து தள்ளினார் கவாஸ்கர். இதற்கு முன்பு ஒரு இந்திய வீரர் தன்னை இந்த அளவுக்கு வசீகரித்தது சச்சின் டெண்டுல்கர் தான் என்று கூறியிருக்கிறார் கவாஸ்கர்.

“இதற்கு முன்பு என்னை இந்த அளவுக்கு வசீகரித்தது சச்சின் டெண்டுல்கர் தான். அதற்குப் பிறகு இப்போது உம்ரன் மாலிக்கை தான் இவ்வளவு ரசித்துப் பார்க்கிறேன். அடுத்த போட்டியில் அவர் விளையாடவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதேசமயம், இந்தப் போட்டியை வென்று ஓரளவு நல்ல நிலைக்கு வந்துவிட்டு, அதன்பிறகு புதிய முயற்சிகள் செய்து பார்க்கலாம் என்று கூட அணி நிர்வாகம் நினைக்கலாம். விசாகப்பட்டினம் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதும் இந்த முடிவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும்” என்று கூறியிருக்கிறார் கவாஸ்கர்.

“உம்ரான் மாலிக் - அர்ஷ்தீப் சிங் டெத் இருவருமே சரியான வீரர்கள்” : இந்திய அணி உணரவேண்டியது என்ன ?

இந்திய அணிக்குப் பந்துவீச்சு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. தன்னுடைய சிறப்பான பந்துவிச்சால் புவனேஷ்வர் குமார் அனைவரையும் கவர்ந்தாலும், மற்ற வீரர்கள் விக்கெட்டுகள் எடுக்கத் தவர்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டினார் கவாஸ்கர்.

“இந்திய அணிக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை புவனேஷ்வர் குமார் மற்றும் யுஸ்வேந்திர சஹால் இருவரையும் தவிர்த்து விக்கெட் எடுக்கக் கூடிய பௌலர்கள் இல்லை என்பதுதான். விக்கெட்டுகள் எடுத்து எதிரணியை நெருக்கடிக்கு உள்ளாக்குவது மிகவும் முக்கியம். ஆனால், இந்த இரண்டு போட்டிகளிலும் புவனேஷ்வர் குமார் தவிர்த்து யாராவது ஒருவராவது விக்கெட் எடுத்தார்களா? எடுப்பார்கள் என்ற நம்பிக்கை கொடுதார்களா? இல்லை. புவனேஷ்வர் குமார் தான் ஸ்விங் மூலம் தாக்கம் ஏற்படுத்தினர். இதுதான் மிகப்பெரிய பிரச்சனை. அதனால்தான் 211 ரன்களைக் கூட இந்திய அணியால் டிஃபண்ட் செய்ய முடியவில்லை” என்றும் கூறினார்.

இருந்தாலும் இந்திய அணி இந்தப் போட்டிக்கு முன் ஒன்றிரண்டு மாற்றங்கள் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உம்ரான் மாலிக் அல்லது ஆர்ஷ்தீப் சிங் இருவரில் ஒருவர், விசாகப்பட்டினத்தில் நடக்கும் இந்த மூன்றாவது டி20 போட்டியில் களமிறக்கப்படவேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம். “இந்தத் தொடரில் ஏதோவொரு கட்டத்தில் அவர்கள் இருவரின் பெயர்கள் பரிசீலிக்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன்” என்று கூறினார் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித்.

“சரியான பதிலை நீங்கள் தேடப்போவதில்லை எனும்போது எதற்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கவேண்டும். உம்ரான் மாலிக் அல்லது ஆர்ஷ்தீப் இருவரில் ஒருவர் ஏதாவதொரு கட்டத்தில் இந்தத் தொடரில் விளையாடவேண்டும். அக்டோபரில் நடக்கும் டி20 உலகக் கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்ய முயற்சி செய்யும்பொது, அவர்கள் அதற்கு முன் சில வாய்ப்புகள் பெற்றிருக்கவேண்டும். விக்கெட் எடுக்கக் கூடிய ஒரு பௌலர் இந்திய அணிக்குத் தேவை. உம்ரான் மாலிக் விக்கெட் எடுக்கக் கூடியவர் என்பது நமக்குத் தெரியும். ஆர்ஷ்தீப் சிங் டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாகப் பந்து வீசினார். அவர்கள் இருவரும் சரியான வீரர்கள் என்பதை இந்திய அணி உணர்ந்துகொள்ளவேண்டும்” என்றும் கூறினார் கிரீம் ஸ்மித்.

banner

Related Stories

Related Stories