தமிழ்நாடு

ரூ.27 லட்சம் மோசடி புகார்.. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் விரைவில் கைது?

அ.தி.முக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது ரூ.27 லட்சம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.27 லட்சம் மோசடி புகார்..  அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் விரைவில் கைது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மின்சாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக, அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் சென்னை காவலர் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. மீனவர் அணி பொருளாளராக உள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கு மின்சாரத் துறையில் வேலை வாங்கி தருவதாக கந்தசாமியிடம் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 6 பேரிடம் ரூ. 27 லட்சம் பணத்தைப் பெற்று நத்தம் விஸ்வநாதனிடம் கந்தசாமி கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறியபடி யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டுள்ளனர். இது குறித்து கந்தசாமி அ.தி.மு.க தலைமைக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் ரூ. 27 லட்சம் மோசடி புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories