தமிழ்நாடு

“தாயின் நினைவு தினத்திற்கு சென்ற சிறுமி.. தந்தையின் கண்ணெதிரே பரிதாப பலி” : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!

சிங்கப்பெருமாள் கோவில் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுமி மீது சரக்கு வாகனம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

“தாயின் நினைவு தினத்திற்கு சென்ற சிறுமி.. தந்தையின் கண்ணெதிரே பரிதாப பலி” : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர்  கிருஷ்ணா (44). இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் வருகிறார். இவரது மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்து உள்ளார். மனைவியின் நினைவு தினைத்தை அனுசரிக்க மதுராந்தகம் அடுத்த கொடிதண்டலம் கிராமத்திற்கு தனது மகன் மற்றும் மகள் அவந்திகா (8) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும் போது சிறுமி அவந்திகா தூக்க கலக்கத்தில்  வண்டியில் இருந்து சாய்ந்த நிலையில், மகளை தாங்கி பிடிக்க தந்தை கிருஷ்ணன் முயன்ற போது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் மூன்றும் சாலை விழுந்துள்ளனர். இதில் அவந்திகா வலதுபுறம் விழுந்ததில், பின்னால் வந்த சரக்கு வாகனம் அவந்திகாவின் தலைமீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  போக்குவரத்து போலிஸார்  சிறுமியின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற சரக்கு வாகனத்தை பரனூர் சுங்கச்சாவடி அருகில் மடக்கி பிடித்து ஓட்டுனரை கைது செய்த சிட்லப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மா நினைவு நாளில் மகளும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories