தமிழ்நாடு

வாசிப்பு காதலர்களே தயாராகுங்கள்.. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை: மீண்டும் தமிழ்நாடு முழுவதும் புத்தகக் கண்காட்சி!

தமிழ்நாடு முழுவதும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை புத்தகக் கண்காட்சியை நடத்த பாரதி புத்தகாலயம் திட்டமிட்டுள்ளது.

வாசிப்பு காதலர்களே தயாராகுங்கள்.. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை: மீண்டும் தமிழ்நாடு முழுவதும் புத்தகக் கண்காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் கொரோனா தீவிரமாக இருந்தபோது, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகப் புத்தகக் கண்காட்சிகள் நடத்தத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஒருவருடமாகச் சென்னை புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட பிரபலமான புத்தகக் கண்காட்சிகள் நடைபெறவில்லை.

இதையடுத்து கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து சென்னை புத்தகக் கண்காட்சியை நடத்தத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 16 முதல் மார்ச் 6ம் தேதி வரை 45வது சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதையடுத்து திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. தற்போது மீண்டும் தமிழ்நாடு முழுவதும், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை புத்தகக் கண்காட்சியை நடத்த பாரதி புத்தகாலயம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, தர்மபுரியில் ஜூன் 24 தேதி முதல் ஜூலை 4ம் தேதி புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. நாகையிலும் ஜூன் 24 முதல் ஜூலை 4 வரையும், அரியலூர் - ஜூன் 24 முதல் ஜூலை 4ம் தேதி வரையும் புத்த கண்காட்சி நடைபெற உள்ளது.

அதேபோல்,ஓசூரில் ஜூலை 8 ம் தேதி முதல் 19ம் தேதி வரையும், கோவையில் ஜூலை 22ம் தேதி முதல் 31ம் தேதி வரையும், புதுக்கோட்டையில் ஜூலை 29 தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரையும், ஈரோட்டில் ஆகஸ்ட் 5 முதல் 16ம் தேதி வரையும், மன்னார்குடியில் ஆகஸ்ட் 18 முதல் 29ம் தேதி வரையும், திண்டுக்கல்லில் ஆகஸ்ட் இறுதியிலும் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது என பாரதி புத்தகாலயம் அறிவித்துள்ளது.

பாரதி புத்தகாலயத்தின் இந்த அறிவிப்பை அடுத்து புத்தக காதலர்கள், புத்தகங்களை வாங்கும் பட்டியலைத் தயார் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories