தமிழ்நாடு

தாயின் புகைப்படத்தை வெளியிட்டதால் சிக்கிய செல்போன் திருடன்.. துப்புத்துலக்க உதவிய Facebook!

செல்போன் திருடனைக் கைது செய்ய போலிஸாருக்கு ஃபேஸ்புக் உதவியுள்ளது.

தாயின் புகைப்படத்தை வெளியிட்டதால் சிக்கிய செல்போன் திருடன்.. துப்புத்துலக்க உதவிய Facebook!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். தனது செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்று விட்டதாக இவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், சஞ்சயின் பேஸ்புக் பக்கத்திலிருந்து ஒரு பெண்ணின் புகைப்படம் வெளிவந்துள்ளது. இதைப் பார்த்து சஞ்சய் அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு திருடுபோன செல்போனில் தனது ஃபேஸ்புக் ஆட்டிவில் இருந்துள்ளது அவருக்கு நினைவிற்கு வந்துள்ளது. பிறகு உடனே இது குறித்து போலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலிஸார் அவரின் ஃபேஸ்புக் முகவரியை வைத்து செல்போன் திருடன் ஜாஃபரை கைது செய்துள்ளனர். மேலும், சஞ்சயிடம் திருடிய செல்போனை தனது தாய்க்கு ஜாஃபர் பரிசாகக் கொடுத்துள்ளார். மேலும் தனது தாயை போட்டோ எடுத்து செல்போனில் இருந்து பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம்தான் ஜாஃபரை போலிஸாரிடம் சிக்கவைத்துள்ளது.

இதையடுத்து போலிஸார் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஜாஃபரிடம் 2 செல்போன்கள் இருந்துள்ளது. இதுவும் திருட்டு செல்போன்கள்தானா என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories