தமிழ்நாடு

மின் திருட்டு.. ஊழல், லஞ்சம் பற்றிய புகார்களை தெரிவிக்க அதிரடி நடவடிக்கை - அரசு வெளியிட்ட அறிவிப்பு என்ன?

மின் திருட்டு ஊழல், லஞ்சம் முதலியவை பற்றிய புகர்கள் பற்றி தெரிவிக்க அவசர உதவி எண்ணை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

மின் திருட்டு.. ஊழல், லஞ்சம் பற்றிய புகார்களை தெரிவிக்க அதிரடி நடவடிக்கை - அரசு வெளியிட்ட அறிவிப்பு என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மின் திருட்டு ஊழல், லஞ்சம் முதலியவை பற்றிய புகர்கள் பற்றி தெரிவிக்க அவசர உதவி எண்ணை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “

மின் திருட்டு, தவறான மின் உபயோகம் முதலியன:

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, என்கிற 4 கோட்டத்தின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு உதவி செயற்பொறியாளரின் தலைமையின் கீழும் 21 அமலாக்கக் குழுக்கள் மாநிலம் முழுவதும் செயல்பட்டுக்கொண்டுள்ளன. இந்த அமலாக்கக் குழுக்களுக்கு கூடுதலாக இரண்டு பறக்கும் குழு /சென்னை மற்றும் உளவுத்துறை பிரிவுகள் அமலாக்கத் துறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அனைத்து 23 குழுக்களும் சென்னையிலுள்ள அமலாக்கப்பிரிவின் மேற்பார்வை பொறியாளரால் கண்காணிக்கப்படுகிறது.

இவை அனைத்தும் காவல்துறை தலைமை இயக்குனர் / லஞ்ச ஒழிப்பு / சென்னை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. ஆகவே, நுகர்வோர்கள் இது சம்பந்தமான புகார்களை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அமலாக்கப்பிரிவிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்புக்கு www.tangedco.gov.in - consumer info- enforcement . புகார்களை ig@tnebnet.org மற்றும் ceapts@tnebnet.org என்ற மின்னஞ்சல்கள் மூலமும் அனுப்பலாம்.

* ஒழுங்கின்மை, கடமை புறக்கணித்தல், ஊழல், லஞ்சம் முதலியவை பற்றிய புகர்கள்:

இந்த வகையிலான புகார்களை உரிமம்தாரரின் மேலதிகாரிகளுக்கும், லஞ்ச ஒழிப்புப் பிரிவிற்கும் அனுப்ப வேண்டும்.

* செந்தர விதிகளில் (Codes and Regulations) மாற்றம் செய்வதற்கான பரிந்துரைகள்:

ஆணையத்தால் இயற்றப்பட்ட விதிகளில், நுகர்வோர்கள் ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால், அந்த மாற்றத்தையும் அதற்கான குறிப்பிட்ட கராணங்களையும் எழுத்து வடிவாக மின் வழங்கல் விதி பிரிவு 27 / மின்பகிர்மான விதி பிரிவு 51ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதித்தொகுப்பு மீள்பார்வைக் குழு (Code Review Panel) விற்கு அனுப்பலாம்.

அத்தகைய மாற்றமும், காரணங்களும் கொண்ட விதித்தொகுப்பு மீள் பார்வைக் குழுவின் கருத்துரு , உறுப்பினர் செயலராக உள்ள தலைப்பொறியாளர் / வணிகம் / தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் / சென்னை அவர்களுக்கு அனுப்பலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories