தமிழ்நாடு

‘மின்தடை.. பழுது பிரச்சனையா?’ : புகார் அளிக்க தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் - குறைகளை எப்படி தெரிவிக்கலாம்?

மின் தடை ஏற்பட்டால் உடனடியாக புகார் அளிக்க அவச உதவி எண்ணை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

‘மின்தடை.. பழுது பிரச்சனையா?’ : புகார் அளிக்க தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் - குறைகளை எப்படி தெரிவிக்கலாம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மின் தடை ஏற்பட்டால் உடனடியாக புகார் அளிக்க அவசர உதவி எண்ணை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது இருந்து வரும் பல நிலைகளைக் கொண்ட குறை தீர்க்கும் செயல்பாட்டு அமைப்பினையையும் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் (முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் என அறியப்பட்ட) ஒவ்வொரு வட்ட அலுவலகத்திலும் இயங்கிக்கொண்டிருக்கிற மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் (CGRF-Consumer Grievance Redressal Forum) பற்றிய விவரங்களையும் பொதுமக்களுக்கு பரப்புவதற்காகவும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வெளியிடப்படுகிறது.

அத்தகைய வசதிகள் பின்வருமாறு பட்டியலிடப்படுகிறது:

* தனி நபர் மின்தடை / பொதுவான மின்தடை/அவசர அழைப்பு :

நுகர்வோர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம், சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, “மின்னகத்தை” 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.

‘மின்தடை.. பழுது பிரச்சனையா?’ : புகார் அளிக்க தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் - குறைகளை எப்படி தெரிவிக்கலாம்?

* சேதமடைந்த மின்கம்பம், தொங்கலான மின் கம்பிகள், திறந்த நிலையிலுள்ள/ சேதமடைந்துள்ள தெருவிளக்குப் பெட்டி/ மின் விநியோகப் பெட்டி, அபாயகரமாக வெளியில் தெரியும் மின் ஒயர்கள் மின் அமைப்பிலுள்ள பழுதுகள் முதலியன :

நுகர்வோர்கள் தங்கள் கைபேசியில் நிழல்படம் எடுத்து அவைகளை கீழ்காணும் “வாட்ஸ் அப்” எண்ணிற்கு அனுப்பலாம்.

1. சென்னை - 9445850829

2. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் - 9444371912

3. கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி - 9442111912

4. சேலம், ஈரோடு, நாமக்கல் - 9445851912

5 மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை 9443111912

6. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விருதுநகர் - 8903331912

7. திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் - 9486111912

8. வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி - 6380281341

9. விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் - 9445855768

* மற்ற வகை புகார்கள், அதாவது மின்மாற்றி / கம்பம்/ தெருவிளக்குப் பெட்டி/ மின்விநியோகப் பெட்டி, மின் அளவி பழுது, குறைவான / அதிகமான மின் அழுத்தப்புகார்கள், கேபிள் பழுது, தீப்பொறி, மின் அமைப்பில் தீ விபத்து, பட்டியிடல் புகார்கள், புதிய மின் இணைப்பு சம்பந்தப்பட்ட புகார்கள், மறு மின் இணைப்பு, மின் தரம், தாமத சேவை, சேவை குறைபாடு, மின்சாரம் தொடர்புடைய பிற புகார்கள் முதலியன:

புகார்கள் / குறைகளை மின்னகம் - மின்நுகர்வோர் அழைப்பு மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யாலாம். மேலும், புகார்களை www.tangedco.gov.in  Reach us  Consumer’s Complaint என்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக வலைய தள பக்கத்தில் பதிவு செய்யலாம்.

மேலும், புகார்களை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவகத்தில் பதிவு செய்யலாம். புகார்கள் தீர்க்கப்படவில்லையெனில் அடுத்த கட்டமாக உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோரை அணுகலாம். ஒவ்வொரு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரும் குறை தீர்க்கும் கூட்டத்தை அனைத்து கோட்ட அலுலகத்திலும் ஒவ்வொரு மாதமும் நடத்துகிறார்கள். குறைகளை இந்த குறை தீர்க்கும் கூட்டத்தின் போது மேற்பார்வை பொறியாளரிடம் சமர்ப்பிக்கலாம்.

மேற்கண்ட வழிகளில் குறை தீர்க்கப்படவில்லை என்றாலும் கூட, அவைகளை மின்சார விதி 2003 ஷரத்துக்களின் படி ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திலும் ஏற்படுத்தப்பட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்திடம் சமர்ப்பிக்கலாம். அனைத்து நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றங்களின் முகவரிகள் ஆணையத்தின் வலையதளம் www.tnerc.gov.in  Consumer Corner என்ற பக்கத்திலும், மேலும் www.tangedco.gov.in  Consumer Info  Consumer Guidance  Consumer Grievance என்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக வலையதளத்திலும் உள்ளது.

மன்றம் குறைகளை தீர்க்கவில்லை என்றாலோ அல்லது மன்றத்தின் ஆணையினால் நுகர்வோர் திருப்தி அடையவில்லையென்றாலோ, அவராகவோ அல்லது அவருடைய சார்பாளர் மூலமாகவோ முப்பது நாட்களுக்குள் ஒழுங்கு முறை ஆணைய அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள மேல் முறையீட்டு அதிகார அமைப்பான மின்சாரக் குறை தீர்ப்பாளரிடமும் மேல்முறையீடு செய்யலாம்.

மேல் முறையீட்டாளர் சம்பந்தப்பட்ட அனைத்து நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் மற்றும் செயல்பாட்டு முறைகளின் விவரங்கள், நுகர்வோர்களின் வழிகாட்டுதலுக்காக www.tnerc.gov.in  Regulations  Final Regulations  Consumer Grievance Redressal Forum and Electricity Ombudsman என்ற பகுதியில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories