தமிழ்நாடு

காலை, மதியம், இரவு.. மூன்று வேலையும் Maggie: கடுப்பில் மனைவியை விவாகரத்து செய்த கணவர்!

கர்நாடகாவில் மூன்று வேலையும் மேகி நூடுல்ஸ் சமைப்பதால் வாலிபர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

காலை, மதியம், இரவு.. மூன்று வேலையும் Maggie: கடுப்பில் மனைவியை விவாகரத்து செய்த கணவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி நூடுல்ஸ். 2 நிமிடத்தில் இந்த உணவு தயாராகிவிடும். இதனால் சில நேரத்தில் அவசரமாக வெளியே செல்லும் இளைஞர்கள் கூட மேகி நூடுல்ஸ் சமைத்துச் சாப்பிடுவார்கள்.

இப்படி பலருக்கும் பயன்படும் இந்த மேகி ஒருவரின் விவாகரத்திற்குக் காரணமாக இருந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா?. ஆனால் இப்படி ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த வாலிபருக்குச் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து அவரது மனைவி திருமணம் நடந்த நாளிலிருந்து மேகி நூடுல்ஸ் மட்டுமே சமைத்துக் கொடுத்துள்ளார்.

முதலில் அவர் மனைவிக்குச் சமைக்கத் தெரியவில்லை. பின்னர் போகப் போக கற்றுக்கொள்வார் என நினைத்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் மேகி நூடுல்ஸ் மட்டுமே சமைத்துக் கொடுத்துள்ளார்.

இதனால் கடுப்பான அவரது கணவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் சம்மதத்துடன் விவாகரத்து வழங்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories