இந்தியா

வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. நடுரோட்டில் அடித்தே கொன்ற மக்கள்: டெல்லியில் பயங்கரம்!

டெல்லியில் 5 வயது வளர்ப்பு மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை பொதுமக்களே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. நடுரோட்டில் அடித்தே கொன்ற மக்கள்: டெல்லியில் பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி தாப்ரி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு 5 வயதில் மகள் ஒருவர் உள்ளார். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் இவர் வேறு ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் அந்த நபர் தனது 5 வயது வளர்ப்பு மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் அந்த நபரை நடுரோட்டில் வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளது.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பொதுமக்களிடம் இருந்து அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்ப்பு மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த தந்தையைப் பொதுமக்களே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories