தமிழ்நாடு

“ஓய்வின்றி உழைத்த மாபெரும் தலைவர் அவர்” : கலைஞர் சிலை திறக்கப்பட்டதையொட்டி சோனியா காந்தி புகழாரம் !

சென்னையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு சிலை திறக்கப்பட்டதையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

“ஓய்வின்றி உழைத்த மாபெரும் தலைவர் அவர்” : கலைஞர் சிலை திறக்கப்பட்டதையொட்டி சோனியா காந்தி புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு சிலை திறக்கப்பட்டதையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், சமூகநீதி, மத நல்லிணக்கம் உள்ளிட்டவைகளுக்காக ஓய்வின்றி பாடுபட்ட மாபெரும் தலைவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னையில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு விழாவையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி வருமாறு:-

சென்னையில் புதியதாக தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டிருப்பது என்பது தமிழக மக்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பையும் மரியாதையையும் போற்றுதலையும் வெளிப்படுத்துவதோடு, தமிழர் தம் நெஞ்சில் நீங்காத இடத்தை அவர் கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.

கலைஞர் அவர்கள் மாநிலத்தில் மட்டுமல்ல; நாடு முழுவதுக்குமான பொது வாழ்வில் உயரிய நிலையில் இருந்தவர். சமூகநீதி, மதச்சார்பின்மை, கூட்டாட்சி மற்றும் சமூக நல்லிணக்கம் இவைகளுக்காக தொலைநோக்குப் பார்வையுடன் ஓய்வே இன்றி உழைத்த உயரிய தலைவர் அவர்.

அவர், விவசாயிகள் முதற்கொண்டு பள்ளி சிறார்கள் வரை சமூகத்தின் பலதரப்பட்ட பிரிவினருக்கும் பலப்பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வைத்த சிறந்த நிர்வாகியாக விளங்கியவர். தனது மாபெரும் இலக்கியப் பணிகளால் உன்னத காவியங்களைப் படைத்து தமிழையும் தமிழர் தம் கலாச்சாரத்தையும் செம்மையுறச் செய்து, தமிழ் பெருமைபடும் வகையில் ஒளிரும் சின்னமாக இருந்துள்ளார்.

தமிழ்நாடும் இந்த தேசமும் மிகவும் நேசித்த ஒரு தலைவருக்கு உரிய முறையில் அளிக்கப்பட்ட மிகப்பெரும் மரியாதைதான் சென்னையில் அவருக்கு சிலை எழுப்பியதாகும். அவரது நினைவுகள் என்றென்றும் மதிக்கத்தக்கது என்பதோடு போற்றத்தக்கதும் ஆகும்” எனத் இவ்வாறு காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories