தமிழ்நாடு

படப்பை To முடிச்சூர் - 8 கிலோ மீட்டர்.. 1.25 மணி நேரத்தில் கடந்து சாதனை : சகோதர சிறுவர்கள் அசத்தல் !

8 கிலோ மீட்டர் தூரத்தி ஓடியே 1.25 மணி நேரத்தில் கடந்து இரண்டு சிறுவர்கள் சாதனைப்படைத்துள்ளனர்.

படப்பை To முடிச்சூர் - 8 கிலோ மீட்டர்.. 1.25 மணி நேரத்தில் கடந்து சாதனை : சகோதர சிறுவர்கள் அசத்தல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், படப்பை பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வெற்றிரதி அப்பகுதியிலுள்ள அங்கன்வாடியில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு 2ம் வகுப்பு பயிலும் சாதனா (7) என்ற மகளும் , எல்.கே.ஜி பயிலும் சபரீஷ் (4) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஓட்ட பந்தய விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். இதை கண்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஊக்கபடுத்தியதன் காரணமாக தனியார் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நோக்கில் கடும் பயிற்சி பெற்றனர்.

இதனை உறுதிசெய்யும் வகையில் நேற்று படப்பை - முடிச்சூர் சாலையில் குளோபல் உலக சாதனை புத்தக நடுவர்கள் முன்னிலையில் 8 கீ.மீ தூரத்தினை 1மணி 25 நிமிடங்களில் ஓடி கடந்து சாதனை‌ படைத்துள்ளனர். இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இருவரையும் வாழ்த்தி மேலும் பல சாதனைகளை பெற புத்தகங்கள் பரிசாக வழங்கினார். சிறுவர்களின் இந்த சாதனை அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories