தமிழ்நாடு

கேரளாவை தாக்கிய West Nile வைரஸ்.. தமிழ்நாட்டிற்கு ஆபத்தா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது என்ன?

தமிழ்நாட்டில் West Nile வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கேரளாவை தாக்கிய West Nile வைரஸ்.. தமிழ்நாட்டிற்கு ஆபத்தா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவில் 'ஜிகா' வைரசைப் போன்று புதிது புதிதாக உயிரைக் கொள்ளும் வைரஸ்கள் அடிக்கடி பரவி மக்களைப் பீதியடைய வைத்து வருகிறது. தற்போது மீண்டும் கேரளாவில் 'வெஸ்ட் நைல்' காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.

திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது நபருக்கு இந்த வெஸ்ட் நைல் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு மே 17ம் தேதி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் இந்த வைரஸ் பரவுமோ என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வெஸ்ட் நைல் தொற்றால் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். எந்த புதிய வகை வைரசாக இருந்தாலும் கேரளாவை பாதிக்கும் வகையில் உள்ளது.

இது போன்ற வைரஸ் பாதிப்புகள் கோவை உள்பட தமிழகத்தில் பரவுவதைத் தடுக்க சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories