தமிழ்நாடு

“புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம்.. முதல்வர் தெளிவாக பேசியுள்ளார்” : பாஜக கும்பலுக்கு அமைச்சர் பதிலடி!

தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்கு இடமில்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

“புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம்.. முதல்வர் தெளிவாக பேசியுள்ளார்” : பாஜக கும்பலுக்கு அமைச்சர் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்திந்தார். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, “ஜூலை 1 முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 13 பாலிடெக்னிக் தொழில்நுட்ப கல்லூரிகளில் 10 புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தளவாடத் தொழில்நுட்பம், இயந்திரவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய படிப்புகளை வடிவமைத்து நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமே நடைபெறும். நீட் தேர்வுக்குப் பின்னரே பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பொறியியல் கட்டணம் உயர்த்தப்படாது. பழைய கட்டணமே அமலில் இருக்கும். அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் (AICTE) பரிந்துரைகளை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்கு இடமில்லை. மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் பல முறைகேடுகள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர், “கூட்டாட்சி தத்துவத்தில் முதல்வர் எதை பேச வேண்டுமோ அதை தெளிவாக பேசியுள்ளார். மாநிலத்திற்கு என்ன தேவை என்று குறிப்பிட வேண்டியது ஒரு முதல்வரின் கடமை, அதைத் தான் முதல்வர் செய்துள்ளார். பிரதமரிடம் தமிழகத்தின் நிலைப்பாடு, என்ன தேவை என்பதை முதல்வர் வைத்ததில் எந்த தவறும் இல்லை. தமிழ்நாட்டில் தங்களது கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க-வினர் குறைகூறி வருகின்றனர். தமிழ்நாடு வளர வேண்டும் என்ற எண்ணம் பா.ஜ.க-வுக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories