தமிழ்நாடு

“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பணவீக்கம் குறைவு” : ‘திராவிட மாடல்’ குறித்து முதல்வர் பெருமிதம்!

தி.மு.க அரசு எடுத்துவரும் பல்வேறு சமூகமேம்பாட்டுத் திட்டங்கள் காரணமாகவே தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பணவீக்கம் குறைவு” : ‘திராவிட மாடல்’ குறித்து முதல்வர் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம், ஆத்தூரில் தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இரண்டு நாட்களுக்கு முன்னால் வந்த செய்தியை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணவீக்கம் அதிகமாகி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தான் பணவீக்கம் குறைந்துள்ளது என்பது தான் அந்த செய்தி.

இந்த புள்ளிவிபரத்தைச் சொல்வது நாம் அல்ல, தமிழ்நாடு அரசு சொல்லவில்லை. ஒன்றிய அரசின் நிறுவனம் தான் இந்தப் புள்ளிவிபரத்தைச் சொல்லி இருக்கிறது. இப்படி தமிழ்நாட்டில் பணவீக்கமானது குறைவதற்கு என்ன காரணம் என்றால் - தமிழ்நாடு அரசு எடுத்துவரும் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் தான் இவை அனைத்துக்கும் காரணம் என்று ஆங்கிலப் பத்திரிக்கைகள் அனைத்தும் எழுதி இருக்கிறார்கள்.

அதில் மிக முக்கியமானது - மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம் ஆகும். பெண்களது வாழ்வில் மிகப்பெரிய மலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது இந்த திட்டம். மாத ஊதியம் வாங்கும் பெண்களாக இருந்தாலும் சரி - வாரச் சம்பளம் - நாள் சம்பளம் வாங்கும் பெண்களாக இருந்தாலும் சரி - அவர்களுக்கு மாதம் தோறும் 600 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரைக்கும் மாதம் தோறும் பெண்களுக்கு செலவு மீதம் ஆகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories