தமிழ்நாடு

கத்தி முனையில் பெண் பாலியல் வன்கொடுமை.. புகார் கொடுத்த ஒரே நாளில் இளைஞரை தட்டி தூக்கிய போலிஸ்!

சென்னையில் கத்திமுனையில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலிஸார் கைது செய்தனர்.

கத்தி முனையில் பெண் பாலியல் வன்கொடுமை.. புகார் கொடுத்த ஒரே நாளில் இளைஞரை தட்டி தூக்கிய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடையாறை சேர்ந்த 43 வயது பெண் துப்பரவு தொழிலாளியாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2009 ஆண்டு கணவரை இழந்த அவர் தனது மகள்களைத் திருமணம் முடித்துகொடுத்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அந்த பெண் வேலை முடித்து வீட்டிற்குச் சென்ற நிலையில், வீட்டின் வெளியே அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் யார் என கேட்டுள்ளார்.

அப்போது, அந்த இளைஞர் அந்த பெண்ணின் வாயை மூடி வீட்டிற்குள் தள்ளி கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாகக் கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அவரை அரைநிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்து கொண்டு, அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதையடுத்து அவரது தொலைபேசிக்கு தொடர்ந்து கொண்டு இதுப்பற்றி போலிஸாரிடம் சொல்லக்கூடாது எனவும், கூறினால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். மேலும் தான் அழைக்கும் தனது ஆசைக்கு இணங்கவேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தனது மகளிடம் இது குறித்து கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அடையாறு அனைத்து மகளிர் போலிஸாரிடம் புகார் அளித்த நிலையில் தனிப்படை போலிஸாரின் உதவியோடு மெரினா கடற்கரையில் இருந்த வாலிபரை கைது செய்தனர்.

பின்னர் போலிஸார் விசாரணையில் திருவல்லிகேணி பகுதியை சேர்ந்த விஷால் , தந்தையை இழந்து இவர், கஞ்சா மற்றும் மதுபோதையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பாலியியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட விஷாலிடம் இது போன்று எத்தனை பெண்களிடம் நடந்து கொண்டுள்ளார் என்று அனைத்து மகளிர் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories