தமிழ்நாடு

நலத்திட்ட உதவிகளை முறையாக கொடுக்காமல் புறப்பட்ட ஓ.பி.எஸ்: தாங்களாகவே பொருட்களை எடுத்துச்சென்ற பொதுமக்கள்!

ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பொதுமக்கள் நலத்திட்ட உதவிகளை தாங்களே எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நலத்திட்ட உதவிகளை முறையாக கொடுக்காமல் புறப்பட்ட ஓ.பி.எஸ்: தாங்களாகவே பொருட்களை எடுத்துச்சென்ற பொதுமக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த செம்மேடு கிராமத்தில் தனியார் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு புதிய பெட்ரோல் பங்கை திறந்து வைத்தார்.

பின்னர் பொதுமக்களுக்குப் பீரோ, கட்டில், கல்யாண சீர் வரிசை பொருட்கள், தண்ணீர்க் குடங்கள், தென்னங்கன்றுகள் உள்ளிட்ட நலத் திட்டப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் சிலருக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனால், நீண்ட நேரம் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காகக் காத்திருந்த பொதுமக்கள் ஓ.பன்னீர் செல்வம் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் தங்களுக்கு நலத்திட்டப் பொருட்கள் கிடைக்காததே என அச்சப்பட்ட அவர்கள் தங்களுக்குக் கொடுப்பதாக இருந்த நலத்திட்ட உதவி பொருட்களை தாங்களே எடுத்துக் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிகழ்ச்சியை உரிய முறையில் அதிமுகவினர் மற்றும் பெட்ரோல் பங்க் நிறுவனத்தினரும் ஏற்பாடு செய்யாததாலே இப்படியான ஒரு சூழ்நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories