தமிழ்நாடு

உயர்த்தும் போதும் கேட்கல.. குறைத்த போதும் கேட்கல.. இதுதான் கூட்டாட்சியா? - விளாசியெடுத்த அமைச்சர் PTR!

உயர்த்தும் போதும் கேட்கல.. குறைத்த போதும் கேட்கல.. இதுதான் கூட்டாட்சியா? - விளாசியெடுத்த அமைச்சர் PTR!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசால் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான வரிகளை தற்போது 50 சதவிகிதம் மட்டும் குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதுதான் கூட்டாட்சியா? என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பதிவு மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு கடுமையாக உயர்த்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மீதான வரியை 250 சதவிகிதம் அதாவது 23 ரூபாயும், டீசல் மீதான வரியை 900 சதவிகிதம் அதாவது 29 ரூபாயும் ஒன்றிய அரசு உயர்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது, வெறும் 50 சதவிகிதம் மட்டும் வரியை குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதுதான் கூட்டாட்சியா? என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories