தமிழ்நாடு

திராவிட மாடல் ஆட்சியின் அடுத்த சாதனை... பணவீக்கம் குறைந்த மாநிலமானது தமிழ்நாடு... முதலமைச்சர் பெருமிதம்!

திராவிட மாடல் ஆட்சியின் அடுத்த சாதனை... பணவீக்கம் குறைந்த மாநிலமானது தமிழ்நாடு... முதலமைச்சர் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் பணவீக்கம் மிகக் குறைந்த அளவான 5.37 விழுக்காடாக உள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களின் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக பிசிஸ்னஸ் லைன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டதன் விவரம் பின்வருமாறு:

”இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

திராவிட மாடல் ஆட்சியின் அடுத்த சாதனை... பணவீக்கம் குறைந்த மாநிலமானது தமிழ்நாடு... முதலமைச்சர் பெருமிதம்!

பல மாநிலங்களில் இது 9 விழுக்காட்டைத் தாண்டி மக்களை வாட்டிவரும் நிலையில், நம் தமிழ்நாட்டில் இது மிகக்குறைந்த அளவில் 5.37 விழுக்காடாக மட்டுமே உள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விடக் குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உணவுப் பொருட்களின் விலைவாசி குறைந்திருப்பதுடன் - மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் வழங்கியதன் மூலம் குறைந்த போக்குவரத்துச் செலவு எனப் பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கிய திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனை இது என ஆய்வாளர்கள் பாராட்டுகின்றனர். இச்சாதனை தொடரும்!”

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories