தமிழ்நாடு

“முதல்வரிடமிருந்து பட்டங்களைப் பெற விரும்பிய மாணவர்கள்” : பட்டமளிப்பு விழாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

முதல்வர் அவர்களோ ஆளுநரிடம் சென்று பட்டங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்என்று கூறியது அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.

“முதல்வரிடமிருந்து பட்டங்களைப் பெற விரும்பிய மாணவர்கள்” : பட்டமளிப்பு விழாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை பல்கலைக் கழகம் சார்பில் 164வது பட்டமளிப்பு விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் மரபுப்படி ஆளுநர் அவர்கள்தான் மாணவர்களுக்கு பட்டமளிப்பது வழக்கம்.

அதேபோன்று மாணவர்களுக்கு ஆளுநர் பட்டம் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது சில மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திருக்கரத்தால் பட்டங்களைப் பெறவிரும்பினர். ஆனால் முதல்வர் அவர்களோ ஆளுநரிடம் சென்று பட்டங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்என்று கூறியது அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.

இச்சம்பவம் குறித்து யூடியூப்சேனலான, “டெய்லி போக்கஸ் தமிழ்”இணையதள தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சிறப்பு செய்தி வருமாறு :- 16.5.2022 அன்று நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது பட்டங்களைப் பெற வந்த மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தங்களது பட்டங்களை கொடுத்து அவரது கையால் பட்டங்களைப் பெற முனைப்பு காட்டினர்.

ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ, அருகில் பட்டங்களை வழங்கிக் கொண்டிருந்த ஆளுநர் அவர்களிடம் அவர்களை அனுப்பி, ஆளுநர் கையால் பட்டங்களைப் பெற வைத்தார். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆளுநர் அவர்கள் பட்டங்களை வழங்கிக் கொண்டிருந்த போது அவருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, தன்னிடம் பட்டங்களைப் பெற வந்த நபர்களையும் ஆளுநரிடம் சென்று பெற்றுக் கொள்ளுங்கள் என்று அன்பாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்தச் செயலை அங்கு வந்திருந்த அனைவரும் பாராட்டினர்” இவ்வாறு யூடியூப் சேனலான “டெய்லி போக்கஸ் தமிழ்” ஒளி பரப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories