தமிழ்நாடு

சட்டவிரோதமாக மதுபான பார்.. பாஜக நிர்வாகி மீது புகார் அளித்த ஊர்மக்கள் : ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

தேனி அருகே பா.ஜ.க நிர்வாகி சட்டவிரோதமாக மதுபான பார் நடத்துவதாக ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்திரவுயிட்டர்.

சட்டவிரோதமாக மதுபான பார்.. பாஜக நிர்வாகி மீது புகார் அளித்த ஊர்மக்கள் : ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்டது பூதிப்புரம் பேரூராட்சி. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட அங்கு உரிமம் இல்லாமல் மதுபானம் பார் நடத்துவதாக பா.ஜ.க நிர்வாகி மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேனி அருகே உள்ள பூதிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். பா.ஜ.க போடி கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ள இவர், வாழையாத்துப்பட்டி விலக்கு அருகே உள்ள பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதாகவும் அதற்கு தகுந்த ஆதாரங்களுடன், சிசிடிவு காட்சிகளும் உள்ளதாக பொதுமக்கள் கூறினார்கள்.

மேலும் இப்பகுதியில் மருத்துவமனை, கோயில்கள், பேருந்து நிறுத்தம் என மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் அப்பகுதியில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை மற்றும் மதுபான பாராக செயல்படுவதால் குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும் சம்பந்தப்பட்ட பா.ஜ.க நிர்வாகி மீது ஏற்கனவே பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 10 மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே உரிமம் இல்லாமல் செயல்படும் மதுபான பாரை தடை செய்தும், சட்டவிரோத செயலில் ஈடுபடும் பா.ஜ.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பூதிப்புரம் ஊர் மக்களுடன் சேர்ந்து அப்பகுதியை சேர்ந்த குமாரலிங்கம் என்பவர் இன்று தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து, உடனடியாக அப்பாரை அகற்றி அவர் மீது நடவடிக்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories