இந்தியா

ஏன் அழைப்பிதல் அடிக்கவில்லை எனக்கேட்டு PWD அதிகாரியை திட்டிய பாஜக அமைச்சர்: புதுவையில் பரபரப்பு!

பாஜக அமைச்சர் சாய் சரவணக்குமார் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரை பொதுமக்கள் மத்தியில் சராமாரியாக திட்டி எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் அழைப்பிதல் அடிக்கவில்லை எனக்கேட்டு PWD அதிகாரியை திட்டிய பாஜக அமைச்சர்: புதுவையில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி வில்லியனூர் தொகுதிகுட்பட்ட வி.மணவெளி பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக அமைச்சர் சாய் சரவணக்குமார் அழைக்கப்பட்டிருந்தார்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு கடும் கோபத்துடன் வந்த பாஜக அமைச்சர் சாய் சரவணகுமார், அங்கிருந்த பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்திய மூர்த்தியை பார்த்து, ஏன் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அடிக்கவில்லை எனவும், இனிமேல் அரசு நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே எனக்கு தகவல் தர வேண்டும். அப்போதுதான் பாஜகவினரை என்னால் விழாவிற்கு அழைத்து வர முடியும்.

அழைப்பிதழ் அடிக்கவில்லை என்றால் இனிமேல் அரசுக்கு நிகழ்ச்சிக்கு என்னை அழைக்க வேண்டாமென சராமாரியாக திட்டி எச்சரிக்கை விடுத்தார். பொதுமக்கள் மத்தியில் சராமாரியாக திட்டியதால் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்யமூர்த்தி செய்வதறியாமல் திகைத்து நின்றார்.

பொதுவாக அடிக்கல்நாட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு புதுச்சேரி அரசு சார்பில் அழைப்பிதழ் அடிப்பது நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories